ஹாட்ஸ்டார் முடங்கிய காரணம் இதுதான்..! மீம்ஸ்களால் கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஹாட்ஸ்டார் திடீரென முடங்கிய நிலையில், அந்நிறுவனம் டொமைனை புதுபிக்காதது தெரியவந்துள்ளது. இதனையறிந்த நெட்டிசன்கள் அந்நிறுவனத்தை மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 17, 2023, 03:36 PM IST
ஹாட்ஸ்டார் முடங்கிய காரணம் இதுதான்..! மீம்ஸ்களால் கலாய்க்கும் நெட்டிசன்கள் title=

முன்னணி ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் திடீரென இந்தியாவில் முடங்கியது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹாட்ஸ்டார் முடங்கியதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தியா மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வெப்சைட் முடங்கியது. இது குறித்து பயனாளர்கள் பலரும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு முறையீடு செய்தனர். உடனடியாக பயனர் ஒருவரின் முறையீட்டுக்கு பதிலளித்த ஹாட்ஸ்டார், டிஸ்னி+ஹாட்ஸ்டார் தொழில்நுட்ப சிக்கலை இப்போது தான் அறிந்திருக்கிறோம். விரும்பத்தகாத அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் படிக்க | Vivo Y56 5G: ரூ.20,000-ஐ விட மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை அடிரடியாக அறிமுகம் செய்தது விவோ

ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். செயலியை மீண்டும் ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்தவும்" என வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயனாளர்கள் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேட்சை லைவ்வாக பார்த்து வந்தனர். திடீரென செயலி டவுன் ஆனதால் மேட்ச் பார்க்க முடியாமல் அவதியடைந்த அவர்கள், என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சிலர் ரீச்சார்ஜ் கோளாறா? அல்லது செயலியை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டோமா? என்றெல்லாம் யோசித்துள்ளனர். 

சில பயனாளர்கள் செயிலியை நீக்கிவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்துள்ளனர். இருந்தபோதும் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சில மணி நேரங்களுக்குப் பிறகே டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களின் வெப்சைட் மற்றும் டொமைனை புதுப்பிப்பு (Renewal) செய்யாமல் இருந்தது தெரியவந்திருக்கிறது. இதனையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து ஹாட்ஸ்டார் நிறுவனத்தை மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ChatGPT Spy: உளவு பார்க்க பயன்படுத்தப்படும் சாட்ஜிபிடி..! என்னவாகும் தனிநபர் பாதுகாப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News