ஜியோவின் வெல்கம் ஆஃபர்! ஜியோ 5ஜி கனெக்ஷனை இலவசமாக பெற பதிவு செய்வது எப்படி?

ஜியோவின் வெல்கம் ஆஃபர் மூலம் ஜியோ 5ஜி கனெக்ஷனை நீங்கள் இலவசமாக பெறலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 24, 2022, 05:16 PM IST
  • ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர்
  • வாடிக்கையாளர்கள் பதிவு செய்வது எப்படி?
  • தகுதியான நபர்களுக்கு மட்டும் 5ஜி கனெக்ஷன்
ஜியோவின் வெல்கம் ஆஃபர்! ஜியோ 5ஜி கனெக்ஷனை இலவசமாக பெற பதிவு செய்வது எப்படி? title=

கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை நாட்டில் அறிமுகப்படுத்தியது. முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, இப்போது டெல்லி NCR, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், வாரணாசி மற்றும் நத்வாடா உள்ளிட்ட 8 நகரங்களில் 5G சேவைகளை வழங்குகிறது. அழைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு Jio 5G கிடைக்கிறது. 

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் என்றால் என்ன?

ஏற்கனவே 5ஜி இணைப்பு உள்ள நகரங்களில் ஜியோ 5ஜியை இலவசமாக பயன்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜியோ நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஜியோ பயனர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டாவை பெற முடியும். Jio 5G ஏற்கனவே உள்ள பகுதிகளில் வசிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையைப் பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆஃபர் மற்றும் சலுகையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

Jio 5G வெல்கம் ஆஃபர்: தகுதிக்கான நிபந்தனைகள்

ஜியோவின் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்கான அழைப்பைப் பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணை நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். எண்ணைப் பதிவுசெய்த பிறகு, அந்த குறிப்பிட்ட பயனர் Jio True 5G-ஐப் பயன்படுத்தத் தகுதியுள்ளவரா என்பதை ஜியோ முடிவு செய்யும்.

மேலும் படிக்க | அட நம்புங்க...வெறும் ரூ. 59-க்கு அசத்தலான நோக்கியா போன்: பிளிப்கார்ட்டில் கோலாகலம்

இருப்பினும், அழைப்பிதழுக்காக பதிவு செய்வதற்கு முன்பே வாடிக்கையாளர்கள் சந்திக்க வேண்டிய சில தகுதிகள் உள்ளன. அதாவது, வாடிக்கையாளர்கள் ஜியோ 5ஜி-க்கு ஏற்ற சாதனத்தை வைத்திருக்க வேண்டும். நெட்வொர்க் கவரேஜ் கிடைக்கும் பகுதியில் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. மேலும், ஜியோ பயனர்கள் நிறுவனத்திடம் இருந்து அழைப்பைப் பெறுவதற்கு ப்ரீபெய்ட் மற்றும் அனைத்து போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் ரூ.239 அல்லது அதற்கும் அதிகமான திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

Jio 5G வெல்கம் ஆஃபருக்கு பதிவு செய்வது எப்படி?

* உங்கள் டெஸ்க்டாப்பில் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் My Jio ஆப்ஸைத் திறக்கவும்

* ஜியோ வெல்கம் ஆஃபர் தாவலுக்குச் சென்று, “எக்ஸ்பிரஸ் இன்ரஸ்ட்” என்று சொல்லும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்

* விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டிய புதிய பக்கம் திறக்கும்.

* அதில், உங்கள் ஜியோ எண்ணை உள்ளிடவும், அதே எண்ணில் OTP-ஐப் பெறுவீர்கள்

* பதிவு செயல்முறையைத் தொடங்க OTP மூலம் சரிபார்க்கவும்

* ஜியோ உங்கள் தகுதியைத் தீர்மானித்தவுடன், அது உங்கள் மை ஜியோ பயன்பாட்டில் ஜியோ வெல்கம் ஆஃபருக்கான அழைப்பை அனுப்பும்.

ஜியோ 5ஜி திட்டங்கள்

வரவிருக்கும் மாதங்களில் அதிக நகரங்களைச் சென்றடைந்தவுடன் ஜியோ தனது 5G திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ஜியோ 5G இணைப்பைப் கொடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி இணைப்பை கொடுக்க முடிவு செய்துள்ளது. அதுவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் Jio 5G ஐ இலவசமாகப் பயன்படுத்த முடியும். மேலும், ஜியோவின் 5ஜி திட்டங்கள் இந்திய பயனர்களுக்கு மலிவு விலையில் இருக்கும் என்று ஆகாஷ் அம்பானியும் முன்னதாக உறுதியளித்துள்ளார்.

ஜியோ 5ஜி கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

Samsung, Oppo, Vivo, OnePlus, Realme மற்றும் Nothing உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஏற்கனவே தங்கள் சாதனங்களை Jio 5G உடன் இணக்கமாக மாற்ற சிஸ்டம் புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இது தவிர, மற்ற தொலைபேசி தயாரிப்பாளர்கள் 5G இணைப்புக்கான OTA புதுப்பிப்பை இன்னும் தள்ளவில்லை. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவற்றை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஆப்பிள் நிறுவனமும் ஐபோன்களுக்கான 5G புதுப்பிப்பை டிசம்பரில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | வெறும் ரூ.395 ரூபாயில் 3 மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான்! ஜியோ அசத்தல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News