ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? இலவசமாக காலர் ட்யூனை செட் செய்யலாம்!

Caller Tune in Airtel: நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் நம்பருக்கு இலவசமாக காலர் டியூன் செட் செய்து கொள்ளலாம்.  இதற்காக தனி கட்டணம் எதுவும் இல்லை.  

Written by - RK Spark | Last Updated : Feb 27, 2024, 06:45 AM IST
  • ஏர்டெல்லில் இலவச காலர் டியூன்.
  • ஒவ்வொரு நம்பருக்கும் செட் செய்து கொள்ளலாம்.
  • எஸ்எம்எஸ் மூலமும் செட் செய்து கொள்ள முடியும்.
ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? இலவசமாக காலர் ட்யூனை செட் செய்யலாம்! title=

Caller Tune in Airtel: முன்பு யாருக்காவது தொலைபேசியில் பேச வேண்டும் என்றால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பேச வேண்டிய நிலை இருந்தது.  தற்போது ஸ்மார்ட்போன் யுகத்தில் அனைத்துமே மாறிவிட்டது. வாட்சப் முதல் இன்ஸ்டாகிராம் கிராம் வரை பல வழிகளில் பேச முடியும்.  உங்களிடம் ஆக்டிவ் சிம் இல்லை என்றாலும், உங்களால இணையத்தை பயன்படுத்தி அனைவருடனும் பேச முடியும். ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தில் எண்ணற்ற பல வசதிகள் உள்ளன.  அத்தகைய வளர்ச்சிகளில் ஒன்று தான் காலர் ட்யூன். ஒருவருக்கு கால் செய்யும் போது, டிரிங் ட்ரிங் என்ற ஒலி கேட்கும். இதற்கு பதிலாக நமது நம்பருக்கு கால் செய்பவர் நாம் அந்த காலை அட்டன் செய்யும் வரை நமக்கு பிடித்த காலர் டியூனை செட் செய்து கொள்ள முடியும்.  

மேலும் படிக்க | உச்சம் தொட்ட Raider 125... 7 லட்சத்திற்கும் மேல் விற்பனை - ஓரம்போன Apache!

காலர் ட்யூன் என்பது நீங்கள் ஒருவரை மொபைலில் கூப்பிடும் போது வரும் பாடல்கள் ஆகும். பெரும்பாலும் மக்கள் காலர் ட்யூன்களை ரிங்டோன்களுடன் சேர்த்து குழப்புகிறார்கள்.  ரிங்டோன்கள் என்பது நீங்கள் உங்கள் மொபைலில் கேட்கும் டியூன் ஆகும். அதேசமயம் காலர் டியூன் என்பது உங்கள் எண்ணை அழைக்கும்போது கேட்கும் ட்யூன்கள் ஆகும்.  நமக்கு பிடித்த கால் டியூன்களை தற்போது இலவசமாக செட் செய்து கொள்ள முடியும். நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் காலர் டியூனை எவ்வாறு செட் செய்வது என்பதை பற்றி பார்ப்போம். தற்போது ஏர்டெல்லில், பல கூடுதல் அம்சங்களுடன் காலர் ட்யூன்களை செட் செய்து கொள்ளலாம்.

ஏர்டெல் பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கும் சேவைகளில் ஒன்று ஏர்டெல் ஹலோ ட்யூன்ஸ் ஆகும். இதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள், டயலாக்குகள், உங்கள் பெயர் அல்லது வேறு எந்த ஒலியையும்காலர் டியூனாக செட் செய்து கொள்ள முடியும்.  மேலும் காலர் டியூனை உங்கள் ரிங் டோனாகவும் வைத்து கொள்ளும் வசதியை ஏர்டெல் வழங்குகிறது.  உங்களுக்கு பிடித்த காலர் டியூன்களை உங்களுக்கு பிடித்த வழிகளில் செட் செய்து கொள்ள முடியும். மேலும் எப்போது வேண்டுமானாலும் இந்த காலர் டியூனை மாற்றி கொள்ளலாம். இது மட்டுமின்றி ஒவ்வொரு அழைப்பாளர்களுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு காலர் டியூன்களை செட் செய்து கொள்ளலாம். 

ஏர்டெல்லில் காலர் டியூனை செட் செய்வது எப்படி?

SMS, IVR மற்றும் Wynk மியூசிக் மூலம் உங்களுக்கு பிடித்த காலர் டியூன்களை அமைத்து கொள்ளலாம்.  எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல்லில் காலர் டியூனை செட் செய்ய உங்கள் ஏர்டெல் எண்ணிலிருந்து 543211 ஐ டயல் செய்து, SET <Space> பாடல் குறியீட்டை உள்ளிட வேண்டும். இதன் பிறகு உங்கள் நம்பருக்கு காலர் ட்யூன் செயல்படுத்தப்படும்.  ஸ்மார்ட் ஃபோனன் பயன்படுத்தும் பயனர்கள் Wynk மியூசிக் மூலம் காலர் டியூன் செட் செய்து கொள்ளலாம்.  ஏர்டெல்லில் எந்த ஒரு ரீசார்ஜ் செய்து இருந்தாலும், Wynk Music மூலம் காலர் டியூன் செட் செய்து கொள்ளலாம்.  

மேலும் படிக்க | தொலைந்த ஆதார் கார்டு உடனடியாக பெறுவது எப்படி? டெக் டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News