IRCTC செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவாகாது - காரணம் இதுதான்

ஐஆர்சிடி செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2022, 12:34 PM IST
  • ஐஆர்சிடியில் புதிய அப்டேட்
  • ரயில் டிக்கெட் முன்பதிவாகாது
  • உடனே அப்டேட் செய்யுங்கள்
IRCTC செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவாகாது - காரணம் இதுதான் title=

தற்போதுள்ள ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையில் ஐஆர்சிடிசி சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் யூசர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அப்டேட் செய்ய வேண்டும். முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த முறை கட்டாயமில்லை. கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து IRCTC தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "IRCTC யூசர்கள் தங்கள் சுயவிவரங்களை புதுப்பிக்க வேண்டும். யூசர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும். அதாவது, ஒடிபி மூலம் அப்டேட் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி - பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க

IRCTC -ல் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை எவ்வாறு சரிபார்ப்பது?

IRCTC செயலி அல்லது இணையதளத்தில் முதலில் லாகின் (உள் நுழைதல்) வேண்டும். 

பின்னர், புரோபைல் பக்கத்துக்கு செல்லுங்கள்

அங்கு உங்கள் மொபைல் எண் மற்றும் ஜிமெயில் அப்டேட் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுவீர்கள்

மின்னஞ்சல் மாற்ற விரும்பினால் எடிட் பட்டனை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளுங்கள்

மாற்றும்போது, இமெயிலுக்கு மெசேஜ் செல்லும். அங்கு கிளிக் செய்து ஒகே செய்தால் அப்டேட் ஆகும்.

இதேபோல், மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும். அதனை சரியாக கொடுத்தீர்கள் என்றால் மொபைல் அப்டேட் ஓவர். 

இந்த அப்டேட்டுகளை நீங்கள் சரியாக முடித்தீர்கள் என்றால் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில்  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதன்பின்னர், வழக்கம்போல், டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | Maruti Suzuki கார்கள் மீது தாறுமாறான ஆஃபர்கள்; உடனே கார் வாங்க ஒடுங்க

டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? 

நீங்கள் பயணிக்க விரும்பும் தேதியை தேர்ந்தெடுத்து, புறப்படும் இடம் மற்றும் செல்லும் இடத்தை பதிவிடுங்கள். அந்த நாளில் நீங்கள் செல்ல விரும்பும் வழியில் இருக்கும் ரயில்கள் அட்டவணையில் காட்டும். அதில், நீங்கள் விரும்பும் ரயிலை தேர்ந்தெடுத்து, முன்பதிவு விவரங்களை பதிவிடுங்கள். அதன்பிறகு கட்டணத்தை செலுத்தி டிக்கெட் பதிவு செய்யவும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News