Jio வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டம், முழு விவரம் இதோ

ஏர்டெல்லுக்குப் பிறகு, தற்போது ஜியோ டிசார்ஜ் + ஹாட்ஸ்டார் நன்மைகளுடன் வரும் ரீசார்ஜ் திட்டங்களையும் மேம்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2021, 11:04 AM IST
Jio வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டம், முழு விவரம் இதோ title=

Reliance Jio: ஏர்டெல்லுக்குப் பிறகு, தற்போது ஜியோ டிசார்ஜ் + ஹாட்ஸ்டார் நன்மைகளுடன் வரும் ரீசார்ஜ் திட்டங்களையும் மேம்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து வருகிறது. இருப்பினும், கூடுதல் தரவுகளுடன், அதன் ப்ரீபெய்ட் திட்டங்கள் OTT நன்மைகளுடன் சிறப்பாக வழங்கத் துவங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plans) வழங்குகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் பயனர்கள் OTT நன்மையை அனுபவிக்க இந்த திட்டத்துடன் இன்னும் கூடுதலாக OTT பயன்பாட்டிற்குச் செல்லுபடியாகும் பெரிய அளவிலான தனி டேட்டா பயன் இப்போது வழங்கப்படுகிறது.

ALSO READ: Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்

ரூ. 499 திட்டம் 
இந்த  திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற அழைப்பு நன்மை, 100 மெசேஜ் நன்மையை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இத்துடன், இந்த திட்டத்தில் ஜியோ ஆப்ஸ்களுக்கான நன்மையை 28 நாட்களுக்கு அணுகலாம். இந்த திட்டம் கூடுதல் 6 ஜிபி டேட்டா மற்றும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகலை உள்ளடக்கியது

ரூ. 888 திட்டம்
இந்த திட்டம் கூடுதல் 5 ஜிபி டேட்டா நன்மையுடன் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் JioTV, JioCinema, JioNews, JioSecurity, JioCloud போன்ற நன்மையுடன், வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை உள்ளடக்கி 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இது பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குகிறது. 

ரூ. 2,599 திட்டம்
இந்த திட்டம் 365 நாட்களுக்கு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 10 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள், JioTV, JioCinema, JioNews, JioSecurity, JioCloud ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குகிறது.

ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News