Yamaha Fascino 125 Fi: யமஹாவின் ‘மலிவான' ஸ்கூட்டர், அசத்தலான அம்சங்களுடன்

Yamaha நிறுவனம் தனது புதிய Fascino 125 FI ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2021, 03:59 PM IST
  • புதிய யமஹா பாசினோ 125 ஹைப்ரிட் மாடலில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) அமைப்பைப் பெறுகிறது.
  • புளூடூத் இயக்கப்பட்ட யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் (Yamaha Motorcycle Connect X)செயலி.
  • இதன் எஞ்சின் 6,500 RPM 8.2 PS அதிகபட்ச பவருடன் உள்ளது
Yamaha Fascino 125 Fi: யமஹாவின் ‘மலிவான' ஸ்கூட்டர், அசத்தலான அம்சங்களுடன் title=

Yamaha New Scooter: யமஹா தனது மலிவான ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. Yamaha நிறுவனம் தனது புதிய Fascino 125 FI ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும். Fascino 125 FI ஹைப்ரிட் ஒரு ஸ்டைலான மாடல். 

SMG அமைப்பு

புதிய யமஹா பாசினோ 125 ஹைப்ரிட் 2மாடலில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) அமைப்பைப் பெறுகிறது. இதன் காரணமாக வாகனத்தைத்  ஸ்டார்ட் செய்யும் போது மின்சார மோட்டார் போல செயல்படுகிறது, இரண்டு பேர் அமர்ந்திருக்கும்போது அல்லது மலை ஏறும் நிலையில் ஸ்டார்ட்-அவுட்டின் போது பாதுகாப்பை கொடுத்து, அபாயத்தைக் குறைக்கிறது.
 
எஞ்சின்  மற்றும் பவர்

Fascino 125 Fi Hybrid ஸ்கூட்டர் BS-6 தரத்துடன் ஏர் கூல்ட், ப்யூயல் இஞெக்டட் (Fi), 125 சிசி ப்ளூ கோர் எஞ்சின் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் எஞ்சின்  6,500 RPM 8.2 PS அதிகபட்ச பவருடன் உள்ளது. மேலும்  5000 RPMல் 10.3 Nm டார்ட் ஜெனரேட் செய்கிறது.

ALSO READ: Best Electric Cycle-ஐ அறிமுகம் செய்தது Toutche, முழு சார்ஜில் 80 கி.மீ செல்லும்

பிற அம்சங்கள்

Yamaha Fascino 125 Hybrid மாடலின் டிஸ்க் பிரேக் வெர்ஷனில்  புளூடூத் இயக்கப்பட்ட யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் (Yamaha Motorcycle Connect X)செயலி  மற்றும் அனைத்து எல்இடி ஹெட்லேம்ப்கள், DRLs, LED டெயில் லேம்ப்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. இது தவிர, ஸ்கூட்டருக்கு ஒரு பக்க ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் சுவிட்ச் உள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்

வண்ண விருப்பங்களைப் பற்றி பேசுகையில், டிஸ்க் பிரேக் பதிப்பு விவிட் ரெட் ஸ்பெஷல், மேட் பிளாக் ஸ்பெஷல், கூல் ப்ளூ மெட்டாலிக், டார்க் மேட் ப்ளூ, சுவே காப்பர், மஞ்சள் காக்டெய்ல், சியான் ப்ளூ, விவிட் ரெட் மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகியவற்றில் கிடைக்கிறது. மறுபுறம், டிரம் பிரேக்  பதிப்பில் டிரிம் விவிட் ரெட், கூல் ப்ளூ மெட்டாலிக், யெல்லோ காக்டெய்ல், டார்க் மேட் ப்ளூ, சுவே காப்பர், சியான் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

விலை

Yamaha Fascino 125 FI  டிஸ்க் பிரேக் பதிப்பின் விலை ரூ .76,530 ஆகவும், டிரம் பிரேக் பதிப்பின் விலை ரூ .70,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு விலைகளும் தில்லியில் உள்ல எக்ஸ்ஷோரூம் விலை. புதிய ஃபாசினோ ஹைப்ரிட் டிரம் பிரேக் வேரியண்ட் தற்போதைய மாடலை விட ரூ .2,000 மலிவானது, அதே நேரத்தில் டிஸ்க் பிரேக் டிரிம் இப்போது ரூ .1,000  விலை அதிகம். 

ALSO READ: Best Electric Cycles: புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது Nexzu Mobility

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News