சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது புதிய சாதனமான Mi Notebook-க்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய தகவல்களின்படி, இந்த சாதனம் ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
சியோமியின் சமீபத்திய டீஸர் Mi Notebook-ன் அம்சங்கள் குறித்து வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி இச்சாதனம் Intel 10th gen Core i7 செயலியுடன் வெளியாகும். முன்னதாக Redmi Book 14-ம் சீனச் சந்தையில் இதே செயலியைக் கொண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தியா உள்ளிட்ட உலக சந்தையில் Mi Notebook அறிமுகப்படுத்தப்படும்.
ரெட்மி இயர்பட்ஸ் எஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது...
பெரிதும் எதிர்பார்க்கப்படும் Mi Notebook குறித்து, சியோமி நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் கணக்கில் டீஸர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த 8 விநாடி வீடியோவில், நிறுவனம் வரவிருக்கும் Mi Notebook-க்கின் அம்சங்களை தெரியபடுத்தியுள்ளது. அதில் அதன் கருப்பு வண்ண மாறுபாட்டைக் காணலாம். மேலும், இந்த சாதனத்திற்கு அல்ட்ரா லைட் டிசைன் மற்றும் சூப்பர் லைட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை எங்கும் எடுத்துச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும். இது தவிர, நிறுவனம் வேறு எந்த அம்சங்களையும் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை.
Mi fans, you have seen the packaging. Here's a glimpse of the #MiNoteBook.
premium design
There is a lot more about the design of this flagship, high-end device.
Global Debut on June 11t #MakeEpicHappen pic.twitter.com/5liVC8bpSJ
— Manu Kumar Jain (@manukumarjain) June 6, 2020
இதுவரை, Mi Notebook குறித்து பல கசிவுகள் வெளிவந்துள்ளன, இது நிறுவனம் இந்தியாவில் Mi பிராண்டிங்கின் கீழ் ரெட்மிபுக்கை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறப்பட்டது. நிறுவனம் தனது மடிக்கணினிகளை ரெட்மி மற்றும் Mi பிராண்டிங்கின் கீழ் சீன சந்தையில் விற்பனை செய்கிறது. Mi நோட்புக்கில் பயன்படுத்தப்படும் பேட்டரி 12 மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், அதன் பிற அம்சங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சியோமியின் முதன்மை சாதனமான Mi 10 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது...
மறுபுறம், சியோமி ரெட்மி புக் 14கை பற்றி பேசினால், அது யூனிபாடி டிசைனுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. NVIDIA MX250 250 கிராபிக்ஸ் செயலியில் வழங்கப்படும் மடிக்கணினி 1.5 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது 14 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் அதன் பேட்டரி 10 மணிநேரம் வரை பவர் பேகப் வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இதில் 10th gen Intel Core செயலியைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பயனர்களின் வசதிக்காக முன்பே நிறுவப்பட்டுள்ளது.
மொழியாக்கம் - தி. விக்னேஸ்வரன்