COVID-19 நெருக்கடியை அடுத்து, Paytm இந்தியாவில் தொடர்பற்ற ஆர்டர் (contactless Order) மற்றும் கொடுப்பனவுகளுக்கான முதல் பாக்கெட் Android POS சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த தொழில்நுட்பத்தை SME க்களுக்கு மலிவான விலையில் கிடைக்கச்செய்யும். நிறுவனம் 'Paytm All-in-one Portable Android Smart POS’- ஐ மாதத்திற்கு 499 ரூபாய் என்ற அறிமுக விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணத்தின்போது ஆர்டர்களையும் கொடுப்பனவுகளைகளையும் ஏதுவாக்க, மொபைல் போனைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் Android அடிப்படையிலான சாதனமாகும். தற்போது கிடைக்கும் Linux அடிப்படையிலான போர்ட்டபிள் POS சாதனங்களை விட இது மிகவும் சக்தி வாய்ந்தது.
Paytm-ன் ‘Scan to Order’ சேவையுடன் இது வருகிறது. இது நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் டேக்அவே ஜாயிண்டுகள் பயன்படுத்தும் அம்சமாகும். எந்த வித தொடர்பும் இல்லாமல் ஆர்டர் எடுத்து பொருட்கள் அல்லது சேவைகளை நுகர்வோருக்கு அளிக்க ஏராளமான SME களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என நிறுவனம் நம்புகிறது. சந்தையில் இந்த சாதனத்தை மிகக் குறைந்த விலையில் அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சாதனம் டெலிவரி பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், மளிகைக் கடைக்காரர்கள் ஆகியோர் டிஜிட்டல் கட்டணங்களை ஏற்க உதவுகிறது.
ALSO READ: Coming soon: விரைவில் WhatsApp-ஐ 4 வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்!!
இந்த சாதனம் 163 கிராம் எடையும், 12 மிமீ தடிமனும், 4.5 அங்குல தொடுதிரையும் (Touch screen) கொண்டுள்ளது. இதில் ஒரு சக்திவாய்ந்த ப்ராசசர், நாள் முழுவதற்குமான பேட்டரி திறன், QR code-ஐ ஸ்கேன் செய்து கட்டணத்தை உடனடியாக ப்ராசெஸ் செய்ய ஒரு in built camera ஆகியவை உள்ளன. பில்லிங், பேமெண்ட் மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை ஆகியவற்றிற்கான cloud-based software உட்பட, தற்போது வெறு எங்கும் இல்லாத பல புதிய அம்சங்கள் இதில் இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
இது 4 ஜி சிம் கார்டுகள், வைஃபை, Bluetooth இணைப்பு ஆகியவற்றுடன் இயங்குகிறது. பணம் செலுத்துவது ஒருபோதும் தோல்வியடையாமல் இருப்பதை இவை உறுதிசெய்கின்றன. அடுத்த சில மாதங்களுக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதனங்களை வெளியிடுவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாதத்திற்கு 20 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை உருவாக்கும்.
ஜிஎஸ்டி இணக்க பில்களை உருவாக்குவதற்கும் அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் தீர்வுகளையும் நிர்வகிப்பதற்கும் சாதனம் ‘Paytm for Business’ செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, ‘Paytm for Business’ செயலி, கடன்கள், காப்பீடு மற்றும் வணிக கட்டா போன்ற நிதி தீர்வுகளைப் பெறவும், கடன், பணம் மற்றும் கார்ட் விற்பனை போன்ற ஏராளமான வணிக சேவைகளைப் பெறவும் வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த செயலியில் சவுண்ட்பாக்ஸ், கால்குலேட்டர், பவர் பேங்க், கடிகாரம், பேனா ஸ்டாண்டுகள் மற்றும் ரேடியோ ஆகியவற்றை வழங்கும் ஒரு வணிகக் கடையும் உள்ளது.
ALSO READ: BSNL-லின் தரவு வேகம் அதிகரிப்பு... எந்தெந்த பகுதியில் என தெரிந்து கொள்ளுங்கள்!!