புதுடில்லி: கூகிள் விரைவில் உங்கள் ஜிமெயில் கணக்கு தொடர்பான புதிய கொள்கைகளை கொண்டு வர உள்ளது. கூகிள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கூகிள் தனது பயனர்களின் கணக்கிற்கான புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறது. இது அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்.
மேலும், ஜிமெயில் (Gmail), டிரைவ் (Google Drive) அல்லது கூகிள் ஃபோட்டோவை (Google Photo) நீங்கள் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல், அதை பார்க்காமல் இருந்தால், அதில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தை கூகிள் (Google) அகற்ற கூடும். புதிய கொள்கைகள், செயலற்ற அல்லது ஜிமெயில் டிரைவில், (கூகிள் டாக்ஸ், கோப்புகள், ஸ்லைடுகள், புகைப்படங்கள், படிவங்கள் மற்றும் ஜம்போர்டு கோப்புகள் உட்பட) சேமிப்பக திறன் வரம்பை மீறிய நுகர்வோர் கணக்குகளுக்கானவை.
ALSO READ | இனி விமான பயணம் போல், ரயில் பயணத்திலும் லக்கேஜ்ஜை தூக்காமல் ஜாலியாக பயணிக்கலாம்..!!!
Google நிறுவனம், "உங்கள் கணக்கிற்கான சேமிப்பு வரம்பை மீறி 2 ஆண்டுகளாக நீங்கள் பயன்படுத்தி வந்தால், கூகிள் உங்கள் உள்ளடக்கத்தை ஜிமெயில், கூகிள் டிரைவிலிருந்து அகற்ற முடியும்" என்று கூறியது. இருப்பினும் உள்ளடக்கத்தை அகற்றும் முன்பு பயனர்களுக்கு பல முறை தகவல் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் லாக் இன் செய்யும் போதோ அல்லது இணையத்தில் பணிபுரியும் போதோ அவ்வப்போது உங்கள் ஜிமெயில், டிரைவில் உள்ள உங்கள் புகைப்படத்தை அல்லது கோப்புகளை பார்வையிடுவதே உங்கள் கணக்கை செயலில் வைத்திருக்க எளிதான வழி. இது தவிர, இன் ஆக்டிவ் அக்கவுண்ட் மேனேஜர் என்னும் அம்சமும் உங்கள் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை நிர்வகிக்க உதவிடும்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்டுகளையும் நீக்க கூகிள் நிறுவனம் கொள்கைகளை ஏற்படுத்த உள்ளது.
நிறுவனம் மேலும் கூறுகையில், 'உங்கள் இலவச 15 ஜிபி சேமிப்பிடத்தை விட அதிகமாக சேமிப்பிடம் தேவைப்பட்டால், கூகிள் ஒன் மூலம் பெரிய சேமிப்பக திட்டத்தில் உங்கள் சேமிப்பிடத்தை அதிகரிக்கலாம்.'
ALSO READ | WhatsApp-ல் வந்துள்ள அசத்தல் அம்சங்களை பயன்படுத்துவது எப்படி..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR