Realme X9 renders Specifications Leaked: Realme 9 Series விரைவில் சந்தையில் அறிமுகம் செய்யயுள்ளது. அதன்படி Realme நிறுவனம் தற்சமயம் தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. அதன்படி Realme தனது புதிய பட்ஜெட் தொலைபேசியை விரைவில் அறிமுகம் செய்கிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது முதன்மை தொலைபேசியான Realme GT ஜூன் 15 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தொலைபேசி ஏற்கனவே சீனாவில் லாஞ்ச் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசியின் ரெண்டர், Passionate Geeks என்ற வலைப்பதிவால் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது Realme 9 தானா அல்லது வேறு ஏதேனும் ஸ்மார்ட்போனா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே சமயம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் Realme 9 சீரிஸ் (Realme 9 Series) இந்தியாவில் அறிமுகப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி இணைப்பிலும் வரலாம்.
ALSO READ | 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் Realme
Realme 9 இன் ரெண்டர்
Realme 8 தொடரின் நிலையான மாடல் 4 ஜி மற்றும் 5 ஜி இணைப்புடன் வருகிறது. ரெண்டர் வெளிவந்ததில், Realme 9 இன் முன் குழுவில் பஞ்ச்-ஹோல் கேமரா வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் பின்புறத்தில் ரெக்டாங்குளர் கேமரா தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் Realme 7 ப்ரோவைப் போன்றது இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தொலைபேசியின் பின்புறத்தில் 64MP முதன்மை கேமராவை இடம் பெறலாம். அதே நேரத்தில், தொலைபேசியின் வலது பக்கத்தில் உள்ள பொத்தானுடன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
Realme9 ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் USB Type C இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் ரெண்டர் ஒரு தனித்துவமான பச்சை நிறத்துடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பிற விவரங்கள் வரும் நாட்களில் தெரியவரும்.
ALSO READ | இந்தியாவில் Realme 4K Smart TV; விலை, சிறப்பு அம்சங்கள் விபரம் உள்ளே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR