Realme New 5G Phone: ரியல்மி நிறுவனம் அதன் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் பிரீமியம் மற்றும் மலிவு விலை போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய 5 ஜி குளோபல் உச்சி மாநாட்டில், ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் பேசுகையில், வரும் மாதங்களில் 10 ஆயிரம் பட்ஜெட்டிக்கு கீழ் உள்ள 5 ஜி ஸ்மார்ட்போன்களை (Realme new 5g phone) அறிமுகப்படுத்த கவனம் செலுத்த உள்ளோம் என்று கூறினார். அதன் விலை தோராயமாக ரூ. 7,500 ஆக இருக்கலாம் எனத் தகவல்.
இந்த பட்ஜெட் போன் ரியல்மி (Budget realme phone) நிறுவனத்தின் மார்க்கெட்டை விரிவாக்கும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றார். நிறுவனம் தனது 5 ஜி போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்கிறது.
2020 ஆம் ஆண்டில், ரியல்மி சுமார் 14 தயாரிப்புகளை 22 சந்தைகளில் அறிமுகப்படுத்தியது. இது, அதன் போர்ட்ஃபோலியோவில் சுமார் 40 சதவீதத்தை கொண்டுள்ளது என்று ஷெத் கூறினார். 2022 ஆம் ஆண்டில், 5 ஜி தயாரிப்புகளின் எண்ணிக்கை 20 க்கும் அதிகமாகும். இது ரியல்மி தயாரிப்பில் 70 சதவீத சந்தையை கொண்டிருக்கும் என்றார்.
ALSO READ | Realme X7 Max 5G அறிமுகம், விலை மற்றும் Specification அறிந்து கொள்ளுங்கள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 5 ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுக்கு உலகளவில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வோம்.
சீனா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ரியல்மி மையங்கள் திறக்கப்படும் என மாதவ் ஷெத் பிடிஐ செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.
5 ஜி நெட்வொர்க் (5g network) இன்னும் கிடைக்காத இந்தியா போன்ற நாடுகளில் 5 ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பது தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு விரைவாக சேவையைத் தொடங்க ஊக்கமளிக்கும் என்று குவால்காம் இந்தியா & சார்க் (SAARC) அமைப்பின் துணைத் தலைவரும், தலைவருமான ராஜன் வாகாடியா (Rajen Vagadia) தெரிவித்தார்.
ரூ .10,000 க்கும் குறைவான ரியல்மி மலிவு விலை 5 ஜி ஸ்மார்ட்போன் எப்போது சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று கேட்டதற்கு, "நிச்சயமாக அடுத்த ஆண்டுக்குள் 5 ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும் என ஷெத் தெரிவித்தார்.
ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR