நாளை முதல் விநியோகம் ரூ.251-க்கு ஸ்மார்ட் போன்

Last Updated : Jul 7, 2016, 04:44 PM IST
நாளை முதல் விநியோகம் ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் title=

கடந்த சில மாதங்களுக்கு முன் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. ரூ.251 க்கு ஸ்மார்ட்போன்கள் ஜூலை 8-ம் தேதி  முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதற்கான முன்பதிவை ஆன்லைனில் துவக்கியது.

அதுன்படி நாளை முதல் கட்டமாக ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் முன்பதிவு செய்த முதல் 5000 பேருக்கு பிரீடம்-251 போன்களை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளது. 

அடுத்த கட்டமாக ரூ.9990-க்கு எல்.இடி. டிவி உள்ளிட்ட மற்ற பொருட்களை குறைந்த விலைக்கு தர உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.

அரசின் உதவி கிடைத்தால் ரூ.251 விலையிலான 2 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் மோஹித் தெரிவித்துள்ளார். பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பல  புதிய வசதிகளுடன் புதிய குறைந்த விலைக்கு மொபைல் போன்கள் வழங்கும் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News