டெக்னாலஜி உலகின் ஜாம்பவான் கூகிள் "FileGo" எனும் புது அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது!.
மொபைல்களின் சேமிப்பு குறைபாடு பிரச்சனைகளை தீர்க்க இந்த அப்ளிகேஷன் கூகிள் வெளியிட்டுள்ளது.
மொபைலில் உள்ள கோப்புகளை வேகமாகவும் எளிதாகவும் பகிரவும். ஆன்லைனில் சேமித்துக் கொள்ளவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது.
தற்போது அண்ட்ராய்டு 5.0 (லாலிபாப்) இயங்கு தளத்திற்கு Google Play Store-ல் இந்த அப்ளிகேஷன் கிடைக்கின்றது!
சமீபகாலமாக "16 ஜிபி அல்லது 32 ஜிபி சேமிப்பு கொண்ட தொலைபேசிகள் அதிக அளவில் பிரபலமாகி வருகின்ற போதிலும், தகவல்களை சேமிப்பதற்கான கொள்ளலவு பிரச்சனைகளும் வளர்ந்துகொண்டு தான் இருக்கிறுது. இந்த பிரச்சனை இனி இருக்காது என எதிர்பார்க்கலாம்!
இந்த செயலி குறித்த விளக்க வீடியோ ஒன்றினையும் கூகிள் வெளியிட்டுள்ளது. நாமும் பார்த்து தெரிந்துக்கொள்வோம்!