பைக்கை விட குறைந்த விலையில் கார் வாங்கலாம்: மாருதி சுசுகியின் அசத்தல் சலுகை

Used Cars Sale: குறைந்த விலையில் கார் வாங்க வேண்டுமா? மாருதி சுசுகி அளிக்கும் இந்த விற்பனையில் பைக்கை விட குறைந்த விலையில் கார்களை வாங்கலாம்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 16, 2022, 12:36 PM IST
  • செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை.
  • பைக்கை விட மலிவான விலையில் கார்களை வாங்கலாம்.
  • மாருதி சுசுகியின் ட்ரூ வேல்யூ தளத்தின் மூலம் நடத்தப்படும் விற்பனையில் சிறப்பு சலுகை.
பைக்கை விட குறைந்த விலையில் கார் வாங்கலாம்: மாருதி சுசுகியின் அசத்தல் சலுகை title=

செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை: நீங்கள் செகண்ட் ஹேண்ட் கார் வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், உங்களுக்காக ஒரு பயனுள்ள செய்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மாருதி சுசுகி, தங்கள் ட்ரூ வேல்யூ மூலம் பைக்கை விட குறைந்த விலையில், யூஸ்ட் அதாவது பயன்படுத்திய மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி சுசுகி ஆல்டோ ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலையில் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த விற்பனை ஏற்றதாக இருக்கும். இந்த கார்களை எப்படி வாங்குவது என்று இந்த பதிவில் காணலாம். 

ட்ரூ வேல்யூ என்பது என்ன? 

இது கார் உற்பத்தியாளர் மாருதி சுஸுகியின் யூஸ்ட் அதாவது பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான (பழைய செகண்ட் ஹேண்ட் கார்) இயங்குதளமாகும். மாருதி தரச்சான்றிதழ் பெற்ற பயன்படுத்திய கார்கள் மட்டுமே இங்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். இந்த பிளாட்ஃபார்மில் நீங்கள் பயன்படுத்திய மாருதி கார்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம். இந்த வசதி ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கிறது.

மேலும் படிக்க | Cheapest Cars: ஜூலை மாதம் மாருதி கார்களில் நம்ப முடியாத சலுகைகள், விவரம் இதோ
 

ஆல்டோ எல்எக்ஸ்ஐ வெறும் 60,000 ரூபாய்க்கு கிடைக்கிறது

மாருதி சுஸுகி ட்ரூ வேல்யூ பிளாட்ஃபார்மில் நாம் பார்க்கக் கிடைத்த மிகவும் மலிவு விலை கார் ஆல்டோ ஆகும். இது 2014 ஆல்டோ எல்எக்ஸ்ஐ வகையாகும். பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார் 82,771 கிமீ ஓடியுள்ளது. ஆன்லைனில் ட்ரூ வேல்யூவில் இதன் விலை ரூ.60,000 என வழங்கப்பட்டுள்ளது. இது சான்றளிக்கப்பட்ட மாடல் கார் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, அதை வாங்குவதற்கு முன், நீங்கள் அனைத்து தகவல்களையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும். இந்த பிளாட்ஃபார்மில் இந்த காரின் சான்றளிக்கப்பட்ட மாடலை நீங்கள் வாங்க விரும்பினால், இங்கே 2014 பெட்ரோல் STD மாறுபாடு வெறும் 130,000க்கு கிடைக்கும்.

சான்றளிக்கப்பட்ட கார் என்றால் என்ன?

மாருதி நிறுவனம் பயன்படுத்திய கார்களை ட்ரூ வேல்யூவில் சோதனை செய்கிறது. மேலும் காரில் ஏதேனும் குறைபாடு இருந்தால், நிறுவனமே அதை சரிசெய்கிறது. மொத்தத்தில், இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இருக்காது. இவையே மாருதி நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட பழைய கார்கள் ஆகும். 

வேகன்ஆர் எல்எக்ஸ்ஐ வேரியன்ட் வெறும் 65 ஆயிரத்தில்

மாருதி சுசுகி ட்ரூ வேல்யுவில் குறைந்த விலை 2004 பெட்ரோல் மாடல் வேகன் ஆர் வெறும் ரூ.65,000-க்கு கிடைக்கிறது. இந்த கார் 87,906 கிமீ ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Used Cars: நம்ப முடியாத விலையில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை, முந்துங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News