Swiggy Pawlice Feature In Tamil: தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் ஹோட்டலில் சென்று உணவு சாப்பிடுவதை விட ஹோட்டலில் இருந்து வீட்டிற்கு ஆர்டர் போடுவதைதான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். வீட்டிற்கு மட்டுமில்லை பணியிடத்திற்கோ, வெளியிடத்திற்கோ நீங்கள் விரும்பும் இடத்தில் நீங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்பது பெரு நகரவாசிகளுக்கு சாதரணமாகிவிட்டது, இன்னும் சில நாள்களில் இரண்டாம் தர நகரங்களிலும் சாதரணமாகவிடும் எனலாம்.
இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் முக்கிய நிறுவனங்களில் ஒன்று ஸ்விக்கி (Swiggy). Swiggy நிறுவனம் ஹோட்டல்களில் இருந்து உணவு டெலிவரி மட்டுமின்றி பல ரீடெய்ல் ஸ்டோர்களிடம் இருந்தும் உங்களுக்கு தேவையான வீட்டு அத்தியாவசிய பொருள்களையும் ஆர்டர் செய்தும் டெலிவர் பெற்றுக்கொள்ளலாம். முட்டை, பால், சோப் போன்ற பொருள்களை Swiggy Instamart மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Swiggy நிறுவனத்தின் புது அம்சம்
அந்தளவிற்கு Swiggy நிறுவனம் ஆன்லைன் டெலிவரி துறையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகிறது. இருப்பினும், Swiggy நிறுவனத்திற்கு சோமாட்டோ (Zomato) நிறுவனமும் கடும் போட்டியை அளிக்கிறது. Blinkit செயலி மூலமும் அத்தியாவசிய பொருளக்ளை டெலிவரிகளை Zomato நிறுவனமும் டெலிவரி செய்து வருகிறது. இந்தியா போன்ற பெரும் சந்தை உள்ள நாட்டில் போட்டியாளர்களை எதிர்கொள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வது இயல்பானது.
மேலும் படிக்க | ஜியோவின் செக்மேட் பிளான்! பிஎஸ்என்எல், வோடஃபோன் ஐடியா எகிறிய பிபி
வாடிக்கையாளர்களை ஈர்க்க பல சமயங்களில் அதிரடி தள்ளுபடிகளை Swiggy, Zomato நிறுவனங்கள் அளிக்கும். தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் இரண்டு செயலிகளை வைத்திருந்தாலும் அதில் தங்களின் செயலியை அணுகுவதற்காக விதவிதமாக விளம்பரங்களும், நோட்டிபிக்கேஷனும் இந்த நிறுவனங்கள் அனுப்பும். அந்த வகையில், Swiggy நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் ஒரு புதிய அம்சத்தை அதன் செயலியில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
ஊழியர்களுக்கான கொள்கை
செயலியில் இந்த அம்சத்தை பயன்படுத்தி உங்களின் தொலைந்த போன செல்லப்பிராணிகளை நீங்கள் கண்டுபிடித்துக்கொள்ளலாம். Swiggy Pawlice என பெயரிடப்பட்ட இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் அவர்களின் இந்த சேவையை பெறலாம். இதன்மூலம், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் தங்களின் தொலைந்து போன செல்லப்பிராணிகள் குறித்து தகவல் அளிப்பதன் மூலம் பரந்துபட்ட நெட்வோர்க்கை கொண்ட Swiggy நிறுவனம் தொலைந்துபோன உங்களின் செல்லப்பிராணியை தேட உதவி செய்யும். இந்த சேவை குறித்து இங்கு முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்.
Swiggy Pawlice மட்டுமின்றி Swiggy Paw-ternity Policy என அதன் முழு நேர பணியாளர்களுக்கான கொள்கை ஒன்றையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கொள்கையும் செல்லப்பிராணிகள் சார்ந்ததுதான், இதில் ஊழியர்கள் சில நன்மைகளை பெறுவார்கள்.
Swiggy Pawlice
அதாவது, நீங்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பவராக இருந்தால் உங்களுக்கு தேவைப்படும் அன்று செல்லப்பிராணியை கவனித்துக்கொள்ள விடுமுறை வழங்கப்படும், செல்லப்பிராணிக்கு தடுப்பூசி போடவோ, மருத்துவரிடம் வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டும் என்றால் விடுமுறை வழங்கப்படும், செல்லப்பிராணி காயம் அடைந்தாலோ உடல்நிலை பாதிக்கப்பட்டலோ விடுமுறை கிடைக்கும். கூடவே, செல்லப்பிராணியை கவனித்துக்கொள்ள அவ்வப்போது வீட்டில் இருந்த பணி செய்யும் சலுகையும் வழங்கப்படும் என இந்த பாலிசி உறுதியளிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, Swiggy Pawlice அம்சத்தை நாம் பார்த்தோமானால், நேரடியாக Swiggy செயலிக்கு சென்று அங்கு இந்த அம்சத்தை தேர்வு செய்து உங்களின் செல்லப்பிராணி குறித்த தகவல்களை தெரிவிக்கவும். தேவையான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அளிக்கவும். 3.5 லட்சம் டெலிவரி ஊழியர்களை உடைய Swiggy நிறுவனம் இதில் உங்களுக்கு சிறப்பாக உதவி செய்யும்.
உணவு டெலிவரி செய்ய நகரின் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது, ஊழியர்கள் உங்களின் தொலைந்துபோன செல்லப்பிராணி எங்காவது தென்பட்டால், அந்த இடத்தை Swiggy நிறுவனத்தின் சிறப்புக்குழுவிடம் அளிப்பார்கள். அந்த இடம் குறித்த தகவல்களை அவர்கள் உரிமையாளர்களிடம் தெரிவிப்பார்கள். அவர்கள் அங்கு சென்று தங்களின் செல்லப்பிராணியை மீட்டுக்கொள்ளலாம். குறிப்பாக, Swiggy ஊழியர்கள் உங்களின் செல்லப்பிராணியை பிடித்துவைத்திருக்க மாட்டார்கள், நீங்களே சென்றுதான் அதனை மீட்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ