Tech Guide: iPhone-க்கு பின்னால் இருக்கும் Secret Button பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Back panel-ஐ tap செய்வதன் மூலம், பயனர்கள் தொலைபேசியில் பல வேலைகளைச் செய்யலாம். இந்த புதிய அம்சத்தின் கீழ், உங்கள் iPhone-னின் பின்புறத்தில் எங்கு வேண்டுமானாலும் tap செய்து அதைப் பயன்படுத்தலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2020, 05:03 PM IST
  • ஐபோனின் பின்புறத்தை இப்போது ஒரு பொத்தானாகப் பயன்படுத்தலாம்.
  • இந்த அம்சம் புதிய iOS 14 கணினி புதுப்பிப்பில் வருகிறது.
  • Back Tap மூலம் பல பணிகளை ஒரு நொடியில் செய்யலாம்.
Tech Guide: iPhone-க்கு பின்னால் இருக்கும் Secret Button பற்றி உங்களுக்குத் தெரியுமா? title=

புதுடெல்லி: iPhone 12 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதற்கிடையில் Apple தனது புதிய மென்பொருளுக்கு ஒரு சிறந்த புதுப்பிப்பை செய்துள்ளது. இப்போது தங்கள் iPhone 12-ன் பின்புறமும் ஒரு ரகசிய பட்டனாக பயன்படுத்தப்படலாம் என்பது மிகச் சிலருக்குத்தான் தெரியும். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது காணலாம்.

iOS 14 இல் ஒரு சிறந்த அம்சம்

தொழில்நுட்ப தளமான தி வெர்ஜ் படி, ஆப்பிள் தனது புதிய iOS 14 இல் புதிய இயக்க முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மென்பொருளைப் புதுப்பித்தவுடன், உங்கள் iPhone-னின் பின்புறத்தையும் ஒரு பட்டனைப் போல பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டும். இருப்பினும், நிறுவனம் தற்போதுள்ள iPhone-களில் எந்த தனி பொத்தானையும் வழங்கவில்லை. ஆனால் உங்கள் தொலைபேசியின் பின்புறத்தை பல பணிகளுக்கான ஒரே பட்டனாகப் பயன்படுத்த முடியும்.

ALSO READ: AirPods Proவில் ஒலி சிக்கல்களுக்கு தீர்வு காணுமா Apple?

Back Panel touch sensitive ஆனது

புதிய மென்பொருளில் Back Tap என்ற அம்சத்தை Apple வெளியிட்டுள்ளது என்று தி வெர்ஜ் கூறுகிறது. இதன் மூலம், iPhone-னின் back panel touch sensitive ஆகி விட்டது. அதாவது, உங்கள் iPhone-னின் back panel ஒரு பட்டனாக மாற்றப்படுகிறது. Back panel-ஐ tap செய்வதன் மூலம், பயனர்கள் தொலைபேசியில் பல வேலைகளைச் செய்யலாம். இந்த புதிய அம்சத்தின் கீழ், உங்கள் iPhone-னின் பின்புறத்தில் எங்கு வேண்டுமானாலும் tap செய்து அதைப் பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சத்திற்கு நிறுவனம் அதிக விளம்பரம் கொடுக்கவில்லை. இதனால்தான் மிகச் சிலருக்கு மட்டுமே இது பற்றித் தெரிந்துள்ளது.

இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது

இந்த அற்புதமான அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் முதலில் தொலைபேசியின் Setting-ல் சென்று Back Tap அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இதற்கு, Setting-க்கு சென்று, Accessibility-ல் சென்று, Touch செக்ஷனுக்கு செல்ல வெண்டும். சற்று கீழே Back Tap ஆப்ஷன் உள்ளது. அதை Turn On செய்ய வெண்டும்.

இப்போது உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும் – Double Tap மற்றும் Triple Tap. இந்த ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்களுக்கு சில அம்சங்களின் பட்டியல் வழங்கப்படும். அவற்றை நீங்கள் பேக் பேனல் அணுக முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் Lock Screen ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், பேனலில் இரண்டு அல்லது மூன்று முறை தட்டி அதை செய்யலாம். நீங்கள் விரும்பினால், பேக் பேனல் மூலம் நீங்கள் ஸ்கிரீன் ஷாட்டும் எடுக்கலாம்.

ALSO READ: Normal SIM-ன் காலம் முடிந்தது: Jio, Airtel மற்றும் Vi-ல் eSIM பெற்று hi-tech ஆகுங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News