கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!!

Telegram CEO Pavel Durov Great Biological Father : டெலிகிராமின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை, ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா! அது எப்படி? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 30, 2024, 05:19 PM IST
  • நூறு குழந்தைகளின் அப்பா!
  • தானத்தில் சிறந்த தானம் எது?
  • தொழில்நுட்ப வளர்ச்சியும் கருவுறுதலும்...
கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!! title=

Trending Sperm Donor : தொழில்நுட்ப வளர்ச்சி உலகை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்ட இந்த காலத்தில், தானம் என்பது பெரிய விஷயமாகத் தெரியலாம். அதிலும் பணதானம், அன்னதானம் என நாம் வழக்கமாக செய்யும் தானத்தை போலல்லாமல், ஒருவரின் குடுமத்தில் விளக்கேற்றும் தானம் விந்துதானம். ஆனால், இப்படி தானம் செய்பவர்கள் அதைப் பற்றி பெரிய அளவில் வெளியில் சொல்லமாட்டார்கள்.

தற்போது டெலிகிராம் செயலியின் CEO டெலிகிராமின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ்,  தனக்குக் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாகச் சொல்லி அதிர வைத்துள்ளார். 5.7 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர், தானம் செய்ததை வெளியில் சொன்னதும் நல்ல நோக்கத்திற்காகத் தான்...  

"எனக்கு 100 க்கும் மேற்பட்ட உயிரியல் குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணமாகாத எனக்கு, தனியாக வாழ விரும்பும் ஒரு மனிதருக்கு இது எப்படி சாத்தியம் என்று தோன்றுகிறதா?" என தனது சமூக ஊடக பதிவில் துரோவ் கேள்வி கேட்டுள்ளார்.

விந்து தானம் அளிக்கத் தொடங்கிய கதை

15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நண்பர் தன்னிடம் வித்தியாசமான ஒரு உதவியை கேட்டதாக அவர் சொல்கிறார். கருவுறுதல் பிரச்சினை காரணமாக அவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை பிறப்பது சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதாகவும், விந்து தானம் கிடைத்தால் குழந்தை பெறமுடியும் என்று மருத்துவர்கள் சொல்வதால், தன்னுடைய விந்தை தானமாக நண்பர் கேட்டதை டெலிகிராம் சி.இ.ஓ சொல்கிறார்.

நன்கொடை பற்றாக்குறை

"உயர்தர நன்கொடை பொருள்" என்று விந்து தானம் பற்றி சொன்ன தனது நண்பர், தன்னை மருத்துவமனையின் மருத்துவர்களிடம் பேச வைத்ததாகவும் விந்துக்களை தானம் கொடுக்க பொதுவாக யாரும் முன்வருவதில்லை என்பது அப்போது தெரியவந்ததாகவும், தரமான விந்துவுக்கு பற்றாக்குறை இருப்பதாக மருத்துவமனையின் தலைவர் தன்னிடம் கூறியதாக பாவெல் துரோவ் கூறினார்.

மேலும் படிக்க | இலவசமாய் சேவைகளை வழங்கினாலும், நிமிசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கூகுள்! அது என்ன ரகசியம்?

சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் உதவி

தனது நண்பருக்குத் தேவையான தானத்தைக் கொடுத்த பிறகு, விந்து தானம் தொடர்பாக ஆழமாக யோசித்ததாக பாவெல் துரோவ்,தெரிவித்தார்.  "யாருடைய விந்து என்றே சொல்லாமல் அதிக தம்பதிகளுக்கு உதவுவதற்காக அதிக விந்தணுக்களை தானம் செய்வது குடிமக்களின் கடமை" என்று மருத்துவர் கூறியது தன்னை சிந்திக்க வைத்ததாக அவர் கூறினார்.

விந்தணு தானப் பதிவு

மருத்துவர் சொன்னது, விந்தணு தானத்திற்கு பதிவு செய்ய ஊக்குவித்தது என்று சொல்லும் பாவெல் துரோவ், இதனால், 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு குழந்தைகளைப் பெற தனது விந்து தானம் உதவியதாக தெரிவிக்கிறார். தற்போது தான் தானம் செய்வதை நிறுத்திவிட்டாலும், IVF கிளினிக்கில் உறைவிக்கப்பட்ட தனது விந்தணுக்கள் இன்னமும் கிடைபப்தாக தெரிவித்தார்.  

39 வயதான தொழிலதிபர் பாவெல் துரோவ், தனது உயிரியல் குழந்தைகள் ஒருவரையொருவர் கண்டுபிடிக்க உதவும் டிஎன்ஏவை ஓப்பன் சோர்ஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆரோக்கியமான விந்தணுக்களின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டும் துரோவ், தனது கடமையைச் செய்ததில் பெருமைப்படுவதாகக் கூறினார்.

விந்தணு தானத்தில் அபாயம் இருக்கிறதா?

இப்படி தானம் செய்வதில் அபாயங்கள் பல இருந்தாலும், ஒரு நன்கொடையாளராக இருந்ததற்கு வருத்தப்படவில்லை என்று அவர் கூறுகிறார். ஆரோக்கியமான விந்தணுக்களின் பற்றாக்குறை உலகளவில் தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதைக் குறைக்க உதவி செய்ததில் பெருமைப்படுகிறேன் என்று சொல்லும் டெலிகாரம் தலைவர், ஆரோக்கியமான ஆண்கள் விந்தணு தானம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதனை வெளிப்படையாக பேசுவதாக கூறுகிறார்.  

டெலிகிராம் CEO இன் இடுகை பகிரப்பட்டதிலிருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. செய்தியின் ஸ்கிரீன்கிராப் X இல் பகிரப்பட்டு, பலரின் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளது.  

மேலும் படிக்க | சார்ஜ் செய்யும் போது உங்கள் போன் சூடாகிறதா? இதோ ஈஸி டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News