ஸ்மார்ட்போனை விக்க போறிங்களா? இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க!

உங்கள் ஸ்மார்ட்போனை விற்பதற்கு முன் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 20, 2022, 01:59 PM IST
ஸ்மார்ட்போனை விக்க போறிங்களா? இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க! title=

நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போனை மற்றவரிடம் விற்கும்போது அதிலுள்ள முக்கியமான டேட்டாக்களை நீக்கிவிட்டு கொடுப்பதே நமக்கு பாதுகாப்பான விசயம் ஆகும்.  பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தெரிந்தவர்களுக்கோ, ஓஎல்எக்சில் யாருக்காவது விற்றாலோ அல்லது எக்ஸ்சேஞ் செய்தாலோ நீங்கள் முதலில் சில அடிப்படையான விஷயங்களை செய்யவேண்டும். மொபைலில் உள்ள அனைத்து முக்கியமான டேட்டாக்களையும் பேக்அப் செய்துகொண்டு, அதிலுள்ள  தகவல்களையும் முழுவதுமாக நீக்கிவிட வேண்டும்.  உங்கள் டேட்டாக்களை பேக்அப் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

Good news! Get free smartphone if you are class 10 pass out | Economy News  | Zee News

மேலும் படிக்க | Truecaller - ன் இந்த அம்சத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எப்படி சாத்தியம்?

முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்டை சின்க் செய்து கொள்ள வேண்டும்.  இதனை செய்ய செட்டிங்ஸ் சென்று அதில் அக்கவுண்டை தேர்ந்தெடுக்கவும், அதில் இமெயில் ஐடியை தேர்வு செய்து அக்கவுண்ட் சின்க் ஆப்ஷனை செய்யவேண்டும்.  பின்னர் மேலே உள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்து 'சின்க் நவ் ' என்பதைக் கிளிக் செய்யவும்.  இது காலெண்டர், கான்டெக்ட்டுகள் மற்றும் பிற கூகுள் ஆப்களின் டேட்டாக்களை சின்க் செய்யும்.  அடுத்ததாக தனிப்பட்ட ஆப்களின் டேட்டாக்களை பேக்அப் செய்யவேண்டும், 

mobile

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களில் உள்ள சாட்கள், பிற தகவல்கள் அனைத்தும் கிளவுடில் சேமிக்கப்படும்.  ஆனால் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் நாமாக தான் க்ளவுடில் சேமித்து வைக்கவேண்டும்.  இதனை வாட்ஸ்அப்பில் செய்ய செட்டிங்ஸ்/சாட் சாட்/பேக்அப் செல்லவேண்டும்.  அதிலுள்ள 'பேக்அப் டு கூகுள் டிரைவ்' கீழ் 'நெவர்' என்று இருக்கும்.  பின்னர்  'ஒன்லி வென் ஐ டேப் பேக்அப்' என்பதைத் தேர்வுசெய்து, மெயின் பேக்அப் பட்டனை க்ளிக் செய்யவும்.  இதன்பின்னர் உங்கள் வாட்ஸ்அப்பிலுள்ள  படங்கள், மெசேஜ்கள் மற்றும் குரூப் மெசேஜ்கள் பேக்அப் செய்யப்பட்டு கூகுள் டிரைவில் சேமிக்கப்படும்.  கேம்கள் மற்றும் பிற ஆப்களின் ஃபைல்கள் ஆஃப்லைனில் அல்லது ஆன்லைனில் பேக்அப் ஆகிறதா என்பதை கவனிக்க வேண்டும் இல்லையேல் இதற்கான அமைப்பை மொபைலில் செய்ய வேண்டும்.

இதைச் செய்வதற்கான எளிய வழி, உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை கணினியுடன் இணைத்து, ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் யூ.எஸ்.பி முறையைத் தேர்வுசெய்து, இன்டர்னல் ஸ்டோரேஜில் உள்ள அனைத்து தகவல்களையும் கணினியில் காபி செய்யலாம்.  இதில் டிசிஐஎம், டாகுமெண்ட்ஸ், டவுன்லோட்ஸ், மூவிஸ், மியூசிக்ஸ் போன்றவை இருக்கும்.  அனைத்து டேட்டாக்களையும் பேக்அப் செய்த பிறகு மொபைலை ரீசெட் செய்யவேண்டும்.  அதற்கு செட்டிங்ஸ் சென்று, மேலே உள்ள தேடல் பகுதியில் 'ரீசெட்' என்பதைத் தேடி, ரீசெட் அல்லது ஃபேக்டரி ரீசெட் என்பதை கிளிக் செய்யவும்.  ரீசெட் முடிந்ததும், உங்கள் போன் ரீஸ்டார்ட் செய்யப்படும், அப்போது திரையில் மொழியைத் தேர்வு செய்யும்படி கேட்கும், அதனை தவிர்த்துவிட்டு நாம் போனை ஆஃப் செய்துவிட்டு  சிம் கார்டு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டை நீக்க வேண்டும்.

மேலும் படிக்க | தவறுதலாக டெலீட் ஆன மெசேஜ்களை திரும்ப பெற சில வழிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News