இந்தியாவின் முதல் பெண் மருத்துவரின் 153-வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள் டூடுல்!
இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவரின் பெயர் ஆனந்தி கோபால் ஜோஷி. இவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார். இன்று அவருக்கு 153-வது பிறந்தநாள். இந்த நாளில் அவரை நினைவு படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் அவரின் புகைப்படத்தை டூடுலில் வைத்துள்ளது. இதனை பெங்களூரைச் சேர்ந்த காஷ்மிரா சரோதி என்பவர் வடிவமைத்துள்ளார்.
ஆனந்தி கோபால் ஜோஷி 1865-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி பிறந்தார். இவருக்கு 9 வயதிலேயே திருமணம் நடத்தியுள்ளனர். இவரது கணவர் திருமணத்துக்குப் பின்னரும் ஆனந்தியின் படிப்பை தொடர ஊக்கப்படுத்தினார். இதை தொடர்ந்து இவர் பெனிசில்வேனியாவில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று 19 வயதில் நாடு திரும்பியுள்ளார்.
இந்தியாவிலும் பெண்களுக்கு என தனி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு. 19-வது நூற்றாண்டிலே புரட்சிப் பெண்ணாக வாழ்ந்த இவர் தனது 21-வது வயதில் காசநோயால் காலமானார்.
இன்றைய பெண்கள் கல்விக்கு ஆனந்தி தொடக்க புள்ளியாக இருந்தவர். இவரின் 153-வது பிறந்தநாளை நினைக்கு கூறும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுலில் வைத்து கொண்டாடியது.