BMW, டெஸ்லாவை ஓரங்கட்டிய டொயோட்டா..!

கடந்த ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட கார்களின் பட்டியலில் பி.எம்.டபள்யூ மற்றும் டெஸ்லாவை ஓரம்கட்டி டொயோட்டா முதலிடம் பிடித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 10:22 PM IST
BMW, டெஸ்லாவை ஓரங்கட்டிய டொயோட்டா..! title=

நல்ல கார் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், அதனைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள போகும் இடம் கூகுள். அதில் இல்லாத தகவல்களே கிடையாது. அந்த கூகுள் தளத்தில் கடந்த ஆண்டில் உலகளவில் தேடப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் இப்போது வெளியாகியிருக்கிறது. கொரோனா காரணமாக கார் மார்க்கெட் டல் அடித்த நிலையிலும், டொயோட்டா காரை மக்கள் அதிகம் தேடியுள்ளனர்.

ALSO READ | WFH-ல் வேலையே செய்யாமல் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்ற ஊழியர்..! எப்படி?

முதல் இடத்தை பிடித்திருக்கும் டொயோட்டா நிறுவன கார்களைப் பற்றி 31 விழுக்காட்டினர் தேடியுள்ளனர். 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 34.8 விழுக்காட்டில் இருந்து குறைந்துள்ளது. டொயோட்டா கார்களை மக்கள் அதிகம் தேடியதற்கு முக்கிய காரணம், கடந்த நவம்பரில் Toyota Gazoo Racing மாடலை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது. இந்த மாடலின் மீதான எதிர்பார்ப்பில் மக்கள் அதிகம் டொயோட்டாவை தேடியுள்ளனர்.

2வது இடத்தில் பி.எம்.டபள்யூ கார் நிறுவனம் இடம்பிடித்துள்ளது. 47 நாடுகளில் டொயோட்டா தேடப்பட்டிருக்கும் நிலையில், பி.எம்.டபள்யூவை 29 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் தேடியுள்ளனர். மெர்சீடஸ் 3வது இடத்தையும், 4வது இடத்தை ஆடி நிறுவனமும் பிடித்துள்ளது. அடுத்தடுத்த 3 இடங்கள் முறையே கியா, ஹூண்டாய், டெஸ்லா நிறுவனங்கள் பிடித்துள்ளன. ரெனால்ட், போர்டு மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் கடைசி மூனறு இடத்தை பிடித்துள்ளன. மிக பிரபலமான கார் நிறுவனங்களான வோல்ஸ்வோகன் உள்ளிட்ட பிராண்டுகள் மக்களால் மிக குறைந்த அளவிலேயே தேடப்பட்டிருக்கின்றன.

ALSO READ | Vivo-வின் இரண்டு அசத்தலான போன்கள் அறிமுகம்: மிகக்குறைந்த விலை, அசத்தல் அம்சங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News