இன்ஸ்டாகிராமில் உங்களை யாராவது Block செய்திருக்கிறார்களா? கண்டுபிடிக்க வழி

Understanding Instagram Blocks: இன்ஸ்டாகிராமில் யாராவது உங்களைத் பிளாக் செய்திருக்கிறார்கள் என யோசிக்கிறீர்களா? அதனை கண்டுபிடிப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2023, 11:54 AM IST
  • இன்ஸ்டாகிராம் பிளாக் கண்டுபிடிப்பது எப்படி?
  • வேறொரு புரொபைல் மூலம் கண்டுபிடிக்கலாம்
  • பிளாக் செய்திருந்தால் உங்கள் தேடலில் புரொபைல் தெரியாது
இன்ஸ்டாகிராமில் உங்களை யாராவது Block செய்திருக்கிறார்களா? கண்டுபிடிக்க வழி title=

identifying blocks Instagram: இன்ஸ்டாகிராமில் யாராவது உங்களைத் பிளாக் செய்திருக்கிறார்கள் அல்லது அவர்களின் புரொபைலை நீக்கினார்களா? என தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. ஒருவர் உங்களை பிளாக் செய்திருந்தால் இதனை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சில டிப்ஸ்கள் மூலம் பிளாக் செய்யப்பட்டிருக்கிறோமா? அல்லது அவர்கள் புரோபைலை நீக்கியிருக்கிறார்களா? என தெரிந்து கொள்ளலாம். 

Search ஆப்சனை பயன்படுத்தவும்

இன்ஸ்டாகிராமில் ஒருவரின் சுயவிவரத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாததற்கு ஒரு சாத்தியமான காரணம், அவர்கள் உங்களைத் பிளாக் செய்திருக்கலாம் அல்லது அவர்களின் புரொபைலை மாற்றியிருக்கலாம். யூசர்கள் தங்கள் பயனர் பெயர்களை மாற்ற Instagram அனுமதிக்கிறது. எனவே அவர்கள் தங்களின் பெயரைகளை மாற்றிய பிறகு பழைய ஐடியை கொண்டு தேடினால் அவர்களைப் பற்றிய விவரம் உங்களுக்கு தெரியாது.

பொது சுயவிவரங்களை எளிதாகப் பார்வையிட முடியும் என்றாலும், “This Account is Private” என்ற செய்தியைப் பெற்றால், நீங்கள் பிளாக் செய்யப்படவில்லை. தனிப்பட்ட பிரைவசிக்காக அவர்கள் அக்வுண்டை செக்யூர் பண்ணி வைத்திருக்கிறார்கள். அப்போது நீங்கள் அவர்களை பின்தொடர முடியும். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டால் விரும்பும் நபர்களின் புரொபைல் அப்டேட்டுகளை நீங்கள் பார்க்க முடியும். 

மேலும் படிக்க | ஏர்டெல்லுக்கு செம ஷாக் கொடுத்த ஜியோ..! 25 மாநிலங்களில் கடையை விரித்தது

மற்றொரு கணக்கிலிருந்து சரிபார்க்கவும்

இன்ஸ்டாகிராமில் யாராவது உங்களைத் பிளாக் செய்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்ப்பதற்கான விரைவான வழி, வேறொரு கணக்கைப் பயன்படுத்தி அவர்களைக் கண்டறிய முயற்சிப்பதாகும். உங்களிடம் இரண்டு கணக்குகள் இருந்தால், உங்கள் மற்றொரு கணக்கைப் பயன்படுத்தி அவற்றைத் தேடுங்கள் அல்லது அவ்வாறு செய்யும்படி நண்பரிடம் கேளுங்கள். வேறொரு கணக்கிலிருந்து தேடும்போது அவர்களின் கணக்கு தென்பட்டால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். இந்த வழியிலும் அவர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஏற்கனவே கூறியதுபோல் அவர்கள் தங்கள் பயனர்பெயரை மாற்றியிருக்கலாம் அல்லது புரொபைலை முடக்கி வைத்திருக்கலாம்.

இணையத்தில் அவர்களின் Instagram புரொபைலை பார்க்கவும்

இன்ஸ்டாகிராமில் உள்ள ஒவ்வொரு பயனருக்கும் அவர்களின் பயனர்பெயரை உள்ளடக்கிய தனிப்பட்ட சுயவிவர இணைப்பு உள்ளது. ஒரு நபரின் சுயவிவரப் பக்கத்தைப் பார்வையிட, instagram.com/username என டைப் செய்யவும், நீங்கள் அவருடைய கணக்குப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அப்போது,  “Sorry, this page isn’t available,” எனில், கணக்கு இல்லை  அல்லது அவர்கள் உங்களைத் பிளாக் செய்திருக்கலாம். 

நீங்கள் Block செய்யப்பட்டுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க, உங்கள் கணக்கிலிருந்து வெளியேறிய பிறகு அதே இணைப்பைத் திறக்கவும் அல்லது வேறு Search Engine -ஐ பயன்படுத்தவும். அதே செய்தியை நீங்கள் பார்த்தால், அவர்கள் தங்கள் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டார்கள் அல்லது தங்கள் யூசர் பெயரை மாற்றிவிட்டார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் சுயவிவரத்தைப் பார்த்தால், அவர்கள் உங்களைத் Block செய்து வைத்துள்ளார்கள் என்று அர்த்தம்

அவர்களை டேக் செய்யவும்

இன்ஸ்டாகிராமில் நீங்கள் ஒருவரால் block செய்யப்பட்டுள்ளீர்கள் என்றால் அவர்களை டேக் செய்ய அல்லது மென்சன் செய்ய அனுமதிக்காது. இதனால் நீங்கள் சந்தேகப்படும் நபரை உங்கள் போஸ்டில் மென்சன் செய்யுங்கள். அப்படி செய்ய முடியவில்லை என்றால் உங்கள் கணக்கை அவர்கள் Block செய்து வைத்துள்ளார்கள் என அர்த்தம். அத்துடன் தன்னிப்பட்ட முறையில் மெசேஜ் செய்ய முயற்சிக்கும்போது, உங்களுக்கு அந்த பாக்ஸ் ஓபன் ஆகவில்லை என்றால் நீங்கள் Block செய்யப்பட்டிருக்கலாம். 

மேலும் படிக்க | 35 ஆயிரம் தள்ளுபடியில் ஆப்பிள் ஐபோன்14 இப்போது விற்பனை - பிளிப்கார்ட் ஆஃபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News