Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பலரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், ஜியோ ரயில் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உடனே ரயில் டிக்கட் புக் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2024, 04:00 PM IST
  • ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆக வேண்டுமா?
  • ஜியோ ரயில் செயலியில் முன்பதிவு செய்யுங்கள்
  • ஜியோ மொபைல் யூசர்கள் மட்டுமே செய்ய முடியும்
Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம் title=

ஜியோ ரயில் ஆப்: நீங்கள் அடிக்கடி இந்திய ரயில்வேயில் பயணம் செய்து, கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் இருந்தால், இப்போது நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உண்மையில், கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இப்போது நீங்கள் ஜியோவின் ரயில் செயலியை முயற்சி செய்யலாம். ஆம், கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு ஜியோவின் இந்தப் செயலி உதவிகரமாக இருக்கும். இப்போது ஜியோ எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் இப்போது ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறது. கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஜியோ ரயில் செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

மேலும் படிக்க | 1000 ரூபாய்க்கும் குறைவாக 'நச்' ஸ்மார்ட்வாட்ச்கள்... எக்கச்சக்க அம்சங்களுடன் தள்ளுபடி விலையில்!

ஜியோ ரயில் செயலி ( Jio Rail app)

ஜியோ ரயில் ஆப் என்பது ரிலையன்ஸ் ஜியோவால் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் ஆகும், இது ஜியோ ஃபோன் பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ் மூலம் உடனடியாக பல்வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் ஜியோ Money போன்ற பல்வேறு கட்டண விருப்பங்களை இந்த ஆப் மூலம் பயன்படுத்தலாம். மற்ற செயலிகளில் செய்வதைப் போலவே பயண தேதி, பயணிகள் விவரம், செல்ல வேண்டிய ஊர் ஆகியவற்றை தேர்வு செய்து கட்டணம் செலுத்தினால், சீக்கிரம் டிக்கெட் கன்பாரம் என்ற செய்தியை பெறுவீர்கள்.

PNR நிலையைச் சரிபார்க்கலாம்:

ஜியோ ரயில் செயலியில் உங்கள் PNR எண்ணை உள்ளிட்டு உங்கள் ரயில் டிக்கெட்டின் நிலையைப் பார்க்கலாம். ரயிலின் தற்போதைய இருப்பிடம், வருகை மற்றும் புறப்படும் நேரம் மற்றும் தாமதங்கள் போன்ற தகவல்களை ஆப்ஸ் காண்பிக்கும். இதுதவிர, ஜியோ ரயில் செயலியில் நீங்கள் ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்களையும் பெறலாம். இந்த செயலியில் உங்கள் ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பயண வரலாற்றைப் பார்க்கலாம். ஜியோ ரயில் ஆப் இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளை ஆதரிக்கிறது.

ஜியோ ரயில் செயலி எவ்வாறு செயல்படுகிறது:

- கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஜியோ ரெயில் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- செயலியை திறந்து உங்கள் ஜியோ தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
- உங்களுக்கு OTP அனுப்பப்படும், அதை நீங்கள் ஜியோ ரயில் செயலியில் உள்ளிட வேண்டும்.
- உங்கள் கணக்கை அமைக்க, நீங்கள் சில அடிப்படை தகவல்களை வழங்க வேண்டும்.
- இப்போது நீங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், PNR நிலையை சரிபார்க்கலாம் மற்றும் Jio Rail App இன் பிற அம்சங்களைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: ஜியோ ரெயில் ஆப் ஜியோ ஃபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது.

மேலும் படிக்க | ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News