Instagram: இனி இன்ஸ்டாவில் இந்த விஷயங்கள் மங்கலாக இருக்கும்! காரணம்?

பிரபல புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் அதன் பயன்பாட்டில் "தீங்கு விளைவிக்கும்" உள்ளடக்கத்தை குறைவாகக் காண புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 22, 2022, 08:04 AM IST
  • இனி இன்ஸ்டாவில் இந்த விஷயங்கள் மங்கலாக இருக்கும்
  • இன்ஸ்டாவின் புதிய மாற்றம்
  • மங்கலாக இருந்தாலும் பயனர்களுக்கு மகிழ்ச்சியே!
Instagram: இனி இன்ஸ்டாவில் இந்த விஷயங்கள் மங்கலாக இருக்கும்! காரணம்? title=

புதுடெல்லி: மெட்டாவுக்குச் சொந்தமான புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் அதன் செயலியில் "தீங்கு விளைவிக்கும்" உள்ளடக்கங்களை பகிர்வதை தவிர்க்க நுணுக்கமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. 

பயனர்களின் பதிவு மற்றும் பகிர்வில் இடப்படும் (Social Media Post) இடுகைகள் வரிசைப்படுத்தப்படும் விதத்தை இயக்கும் அல்காரிதம் இப்போது "கொடுமைப்படுத்துதல், வெறுக்கத்தக்க பேச்சு அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய" (bullying, hate speech, incite violence) உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளிக்காது என்று நிறுவனம் கூறியுள்ளதாக Engadget தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமின் விதிகள் இந்த வகையான உள்ளடக்கத்தை ஏற்கனவே தடைசெய்தாலும், இந்த புதிய மாற்றமானது, மேலும அதிக பயனாளர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்று நிறுவனம் கருதுகிறது.

"எங்கள் விதிகளை மீறுவதை புரிந்து கொள்ள, முன்பு எங்கள் விதிகளை மீறிய தலைப்பைப் போன்ற தலைப்பு வைத்திருப்பது, முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் இந்த புதிய முடிவு செயல்படுத்தப்படும்" என்று நிறுவனம் ஒரு புதுப்பிப்பில் விளக்கியது.

ALSO READ | ஜியோ..! 5G-ஐ விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம் 6G

இதுவரை, இன்ஸ்டாகிராம் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை (Social Media Post), எக்ஸ்ப்ளோர் போன்ற பொதுப் பகுதிகளிலிருந்து மறைக்க முயற்சித்துள்ளது, ஆனால் இந்த வகையான உள்ளடக்கத்தை இடுகையிடும் கணக்குகளைப் பின்தொடரும் பயனர்களுக்கு அது எவ்வாறு தோன்றும் என்பதை மாற்றவில்லை.

சமீபத்திய மாற்றத்தின் அர்த்தம், முன்பு அகற்றப்பட்ட இடுகைகளுக்கு "ஒத்த" எனக் கருதப்படும் இடுகைகள் பின்தொடர்பவர்களுக்கும் மிகவும் குறைவாகவே தெரியும்.

மெட்டாவின் செய்தித் தொடர்பாளர், "தீங்கு விளைவிக்கக்கூடிய" இடுகைகள் அதன் சமூக வழிகாட்டுதல்களை மீறினால், அவை அகற்றப்படலாம் என்பதை உறுதிப்படுத்தினார்.

2020 ஆம் ஆண்டிலும் இன்ஸ்டாகிராம் இதேபோன்ற மாற்றத்தை முன்னெடுத்தது. உண்மைச் சரிபார்ப்பாளர்களால் நீக்கப்பட்ட தவறான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் கணக்குகளை இன்ஸ்டாகிராம் குறைக்கத் தொடங்கியது. 

இருப்பினும், அந்த மாற்றத்தைப் போல இல்லாமல், சமீபத்திய கொள்கையின் மூலம் தனிப்பட்ட இடுகைகள் மட்டுமே பாதிக்கப்படும் என்றும் "ஒட்டுமொத்த கணக்குகள் பாதிக்கப்படாது" என்றும் Instagram கூறியது.

Also Read | iPhone 13-ல் இதுவரை இல்லாத தள்ளுபடி: அசத்தும் Flipkart Sale

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News