கூகுள்மீட்டிற்கு போட்டியாக வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்புவதன் மூலம் மற்றவர்களை அழைப்பில் இணைக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2022, 03:15 PM IST
  • வாட்சப்பில் இனி குழு அழைப்புகளுக்காக லிங்கை அனுப்ப முடியும்.
  • இது தற்போது சோதனை முயற்சியில் உள்ளது.
கூகுள்மீட்டிற்கு போட்டியாக வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்! title=

வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது. புதிய தேடல் ஆப்ஷன்கள் மற்றும் மெஸேஜ் ரியாக்ஷன்ஸ் போன்ற அம்சங்களுக்கு பிறகு, வாட்ஸ்அப் இப்போது மெசேஜிங் பயன்பாட்டில் அழைப்புகளில் இணைய லிங்குகளை வாடிக்கையாளர்கள் உருவாக்குவதற்கான வசதிகளை வழங்க இருக்கிறது.  வாட்ஸ்அப் ஏற்கனவே ஒரு குழு அழைப்பில் இருந்தாலும் இடையில் அந்த அழைப்பில் ஒருவர் இணைந்துக்கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.  இப்போது வாட்ஸ்அப் லிங்குகளை உருவாக்கி அதன்மூலம் மற்ற கான்டெக்ட்டுகளை அழைப்பில் இணைப்பதற்கான அம்சங்களையும் அனுமதிக்க உள்ளது.

மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் Font டிசைன்களை மாற்றுவது எப்படி?

இது குறித்து வாட்ஸ்அப் கூறுகையில், அழைப்புக்கான லிங்குகளை பயன்படுத்தி மற்றவர்கள் அழைப்புகளில் சேருவதை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் வழங்கும்.  கான்டெக்ட் லிஸ்டில் இருக்கும் நபர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்த லிங்கை அனுப்பலாம், மேலும் வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் இந்த லிங்கை அனுப்பமுடியும்.  இந்த லிங்கை பயன்படுத்தி அவர்கள் வாட்ஸ்அப்பில் அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம்.  வாட்ஸ்அப் அழைப்புகள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.  

இதேபோன்ற அம்சம் சற்று மாறுதலாக மெஸ்ஸெஞ்சரில் உள்ளது, மெஸ்ஸெஞ்சரில் யார் வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம், இவ்வளவு ஏன் பேஸ்புக் இல்லாதவர்களும் இணைந்து கொள்ளலாம்.  ஆனால் வாட்ஸ்அப்பில் ஒரு குறை என்னவென்றால் வாட்ஸ் அப் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே அந்த அழைப்பில் இணைந்துகொள்ள முடியும்.  மேலும் இந்த அம்சமானது தற்போது சோதனையில் இருப்பதால் உங்களால் லிங்கை உருவாக்க முடியாது, ஆனால் விரைவில் இந்த அம்சத்தை உங்களால் பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

இந்த அம்சத்தை நினைத்து உடனடியாக யாரும் மகிழ்ச்சியடைய முடியாது, ஏனெனில் வாட்ஸ்அப் சில அம்சங்களை சோதனை செய்த பிறகு அதனை முழுமையாக வழங்காமல் நீக்கிவிடுகிறது.  அதனால் இந்த அம்சத்தை முழுமையான பயன்பாட்டிற்கு செயல்படுத்தும் அல்லது நீக்கிவிடும் என்பது பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மேலும் வாட்ஸ்அப் கூடிய விரைவில் மெசேஜ்களை எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் விருப்பத்தை வழங்க இருக்கிறது, ஒரு மெசேஜிற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆறு எமோஜிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதிலாக அளிக்கலாம்.

மேலும் படிக்க | அலெக்ஸ்சா, வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் - மத்திய அரசு எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News