Xiaomi 13 Pro: அமேசானில் ஆஃர் டமாக்கா... 40% தள்ளுபடியில் சியோமி ஸ்மார்ட்போன்

அமேசானில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஃபரில் சியோமி 13 புரோ மொபைல் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த மொபைலை இஎம்ஐ மூலம் 3,822-க்கு வாங்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 17, 2023, 09:10 AM IST
Xiaomi 13 Pro: அமேசானில் ஆஃர் டமாக்கா... 40% தள்ளுபடியில் சியோமி ஸ்மார்ட்போன் title=

ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் கோடை சிறப்பு தள்ளுபடி விற்பனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சியோமி 13 புரோ மொபைல் உள்ளிட்ட பல்வேறு மொபைல் மாடல்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆஃபரில் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸ், சிறப்பு தள்ளுபடி ஆஃபர், வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கு பிரத்யேக தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆஃபரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டால் மிக குறைந்த விலையில் மொபைல்கள் மற்றும் கேட்ஜெட்டுகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அள்ளிச் செல்லலாம். 

மேலும் படிக்க | ட்விட்டர் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Xiaomi 13 Pro அம்சங்கள் என்ன?

Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பேசுகையில், இது 6.73 இன்ச் 2K 120Hz E6 AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் Snapdragon 8 Gen 2 செயலி பொருத்தப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை இதில் மூன்று பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சார் 50 எம்.பி. வீடியோ மற்றும் செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 4820mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் விலை என்ன? எவ்வளவு தள்ளுபடி?

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.89,999 ஆகும். நீங்கள் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு மாறுபாட்டை பிளாட் தள்ளுபடியுடன் வாங்கினால், அது ரூ.79,999-க்கு கிடைக்கும். அதாவது ரூ.10 ஆயிரம் உடனடி தள்ளுபடி. டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கி அட்டை சலுகைகளும் இதில் கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி கார்டில் பணம் செலுத்தினால் 8 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடியின் பலனைப் பெறுவீர்கள். இஎம்ஐ ஆப்சனும் இருக்கிறது. இதில் நீங்கள் மாதம் ரூ.3,822 செலுத்தினால் போதும்.

மேலும் படிக்க | ’சீக்கிரம் லட்சாதிபதியாகலாம்’ சாட்ஜிபிடி கொடுக்கும் ரூ.16 லட்சம் - விட்டறாதீங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News