விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Redmi 7A; விலை???

சீனாவை மையமாக கொண்டு இயக்கும் Xiaomi நிறுவனத்தில் அடுத்தக்கட்ட பட்ஜட் போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 6, 2019, 05:43 PM IST
 விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Redmi 7A; விலை???

சீனாவை மையமாக கொண்டு இயக்கும் Xiaomi நிறுவனத்தில் அடுத்தக்கட்ட பட்ஜட் போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

மளிவான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில் Xiaomi நிறுவன ஸ்மார்ட்போன்களும் அடங்கும். அந்த வகையில் தற்போது தனது நிறுவன தயாரிப்புகளில் அடுத்த படைப்புகளை இந்தியாவில் வெளியிட Xiaomi  திட்டமிட்டுள்ளது.

Redmi Y3 மற்றும் Redmi 7A ஆகியவற்றுடன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Xiaomi Redmi 7-னை விரைவில் இந்தியாவில் வெளியிட Xiaomi திட்டமிட்டுள்ளது. 

சமீபத்தில் Redmi 7 மற்றும் Redmi Note 7 Pro ஆகிய ஸ்மார்ட் போன்களை Xiaomi நேபாளத்தில் வெளியிட்டது. அதற்கு முன்னதாக சீனாவில் முதன்முறையாக அறிமுகம் செய்துவைத்தது. இந்நிலையில் தற்போது Redmi 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் Xiaomi வெளியிடலாம் எனவும், இத்துடன் Redmi Y3 மற்றும் Redmi 7A -வினையும் வெளியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Redmi Y3 ஆனது Redmi Y2 போன்று செல்பி போகஸ்ட் அம்சத்தை பெற்றிருக்கலாம் எனவும், Android 9 Pie இயங்குதளத்துடன் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. அதேப்போல் Redmi 7 ஆனது Redmi 6-னை மிஞ்சும் திறனுடன் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. இந்திய மதிப்பில் ரூ 7,200-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் Redmi 7 ஆனது கருமை, சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது.

---Redmi 7 பற்றி சில முக்கிய குறிப்புகள்---

  • 6.26-inch HD+ display
  • Qualcomm’s Snapdragon 632 processor
  • 2GB RAM + 16GB (அ) 3GB RAM + 32GB (அ) 4GB RAM + 64GB
  • இரட்டை பின் கேமிரா (12 MP + 2 MP)
  • முன் கேமிரா (8 MP)
  • Android 9 Pie இயங்குதளம்.
  • 4,000mAh பேட்டரி மற்றும் விரல் ரேகை சென்ஸார்

More Stories

Trending News