யமாஹா ஆர்எக்ஸ் 100 மீண்டும் வர இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானவுடன் கடந்த சில நாட்களாக பைக் மார்க்கெட்டில் புயல் வீசித் தொடங்கியிருக்கிறது. ஜாவா, பஜாஜ்சேட்டக் உள்ளிட்ட விண்டேஜ் பைக்குகளின் ரீ என்டிரி லிஸ்டில் யமாஹா ஆர்எக்ஸ் 100 சேர்ந்திருப்பது, பைக் பிரியர்கள் மற்றும் இளைஞர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதே பைக் எப்போது ரிலீஸாகும்? என்ற எதிர்ப்பார்ப்பிலும் உள்ளனர். 90களின் தொடக்கத்தில் மாஸாக இருந்த இந்த பைக் 96 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல மார்க்கெட்டில் இருந்து காணாமல் போனது. புதிய பைக் இல்லையென்றால் என்ன? செகணட் பைக் மார்க்கெட்டில் கோலோச்சத் தொடங்கியது.
மேலும் படிக்க | Amazon Prime Day Sale 2022: ஐபோன் 13-ல் இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, முந்துங்கள்!!
மற்ற பைக்குகளுக்கு இருக்கும் வேல்யூவை விட சரிபாதி அதிகமான வேல்யூ யமாஹா ஆர்எக்ஸ் 100 பைக்குக்கு இருக்கிறது. விலை அதிகம் மற்றும் மைலேஜ் குறைவு என்பது பலருக்கு அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த யமாஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை பயன்படுத்த தயங்கினர். ஆனால், இப்போது வர இருக்கும் பைக் லேட்டஸ்ட் அப்டேட்டுகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி ஏற்றம், பொருளாதார சிக்கல் நீடிக்கும் இந்த சமயத்தில், சராசரியான மைலேஜ் கொடுக்கும் அளவிற்காவது உருவாக்கினால், இப்போது இருக்கும் எதிர்பார்ப்புக்கு விற்பனையில் கொடி கட்டி பறந்துவிடும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆர்எக்ஸ் 100 பைக்கை பார்க்கலாம்.
காரணம் இந்த பைக் மீது எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. ஒருமுறையாவது வாங்கி ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அதனையெல்லாம் யமாஹா நிறுவனம் சரியாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப வெளிவர இருக்கும் ஆர்எக்ஸ் 100 வடிவமைத்தால் விற்பனையில் நிச்சயம் ராஜபாட்டை நடத்தலாம். இது குறித்து யமஹா இந்தியாவின் தலைவர் ஈஷின் சிஹானா (Eishin Chihana), பேசும்போதுகூட Yamaha RX100 மீண்டு வருவதையும், அது நவீன வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார். எலக்டிரிக் ஸ்கூட்டர்களையும் அறிமுகப்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆர்எக்ஸ் 100 பைக் அதிகபட்சம் 40 கி.மீ மைலேஜ் கொடுத்த நிலையில், அதைவிட புதிய பைக்கின் மைலேஜ் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. விலையைப் பற்றிக் லீக்காகியிருக்கும் தகவலில், அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் விலையில் யமாஹா ஆர்எக்ஸ் 100 விலை நிர்ணயிக்க வாய்ப்பு இருப்பதாக மார்க்கெட் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | Jio Fiber திட்டம்: Netflix, Amazon Prime என அனைத்தும் இலவசம், இன்னும் பல நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ