Amazon Prime Day Sale 2022: ஐபோன் 13-ல் இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, முந்துங்கள்!!

Amazon Prime Day Sale 2022: குறைந்த விலையில் ஐபோன் வாங்கணுமா? இப்போதே முந்துங்கள். அமேசான் சேலில் இதற்கான சூப்பர் வாய்ப்பு உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 23, 2022, 12:38 PM IST
  • அமேசான் பிரைம் டே சேல் 2022 ஐபோன் 13 விலை.
  • ஐபோன் 13- இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி.
  • எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ஐபோன் 13 விலை மேலும் குறையும்.
Amazon Prime Day Sale 2022: ஐபோன் 13-ல் இதுவரை இல்லாத அளவு  தள்ளுபடி, முந்துங்கள்!! title=

அமேசான் பிரைம் டே சேல் 2022 ஐபோன் 13 விலை: கடந்த பல நாட்களாக, இந்தியாவில் உள்ள பயனர்கள், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் சிறப்பு அமேசான் பிரைம் டே சேல் எப்போது தொடங்கும் என்று காத்திருந்தனர். நீங்களும் இந்த விற்பனைக்காகக் காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த விற்பனை தொடங்கிவிட்டது. இன்று அதாவது ஜூலை 23, 2022 மற்றும் நாளை, அதாவது ஜூலை 24, 2022, என இரண்டு நாட்களுக்கு இந்த விற்பனை தொடரும். இந்த விற்பனையில், அமேசானில் கிடைக்கும் அனைத்து வகையான பொருட்களையும் வாடிக்கையாளர்கள் மலிவாக வாங்கலாம். இந்த விற்பனையின் மூலம் ஆப்பிளின் ஐபோன் 13-ஐ எவ்வாறு மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த சலுகையைப் பற்றி அனைத்தையும் இங்கு விரிவாக காணலாம். 

ஐபோன் 13- இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி!

அமேசான் பிரைம் டே சேலின் இந்த சலுகை ஐபோன் 13 இன் 128ஜிபி வேரியண்டில் இயங்குகிறது. ரூ.79,900 விலையில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 16% தள்ளுபடிக்கு பிறகு ரூ.66,900க்கு விற்கப்படுகிறது. அதாவது இதில் ரூ.13 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கிறது. அமேசான் பே மூலம் பணம் செலுத்தினால் கவர்ச்சிகரமான கேஷ்பேக்கைப் பெறலாம். மேலும் இந்த போனை நோ-காஸ்ட் இஎம்ஐ- இல் வாங்கலாம்.

மேலும் படிக்க | Jio Fiber திட்டம்: Netflix, Amazon Prime என அனைத்தும் இலவசம், இன்னும் பல நன்மைகள்

எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ஐபோன் 13 விலை மேலும் குறையும்

இந்த சலுகையில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அதாவது பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது. அதாவது உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக இந்த ஐபோன் 13- ஐ வாங்குவதன் மூலம் 12,900 ரூபாய் வரை சேமிக்கலாம். அமேசான் பிரைம் டே சேல் 2022 இன் இந்த டிலில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஐபோன் 13 இன் விலை ரூ.79,900ல் இருந்து ரூ.54 ஆயிரமாகக் குறையும். அதாவது ஐபோன் 13 இல் ஒட்டுமொத்தமாக ரூ.25,900 தள்ளுபடி பெறலாம்.

ஐபோன் 13 இன் அம்சங்கள்

இந்த டீலில் ஐபோன் இன் 128ஜிபி சேமிப்பு மாறுபாடு பற்றி பேசப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. 5ஜி சேவைகளுடன் கூடிய இந்த ஐபோன் 13 ஆனது 6.1-இஞ்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்ட இரண்டு சென்சார்களும் 12எம்பி மற்றும் முன் கேமராவும் 12எம்பி கொண்டுள்ளது. இரட்டை சிம் சேவைகள் கொண்ட இந்த போனில், உங்களுக்கு ஒரு வருட பிராண்ட் வாரண்டியும் வழங்கப்படும்.

ஜூலை 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அமேசான் ப்ரைம் டே சேல் 2022 விற்பனையின் பயன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விற்பனையானது அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமானது. ஆகையால் நீங்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள அமேசான் பிரைம் உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News