எந்தவொரு ஆவணமும் இல்லாமல் ஆதார் அட்டையில் நீங்கள் மாற்றங்கள் செய்யலாம்

ஆதார் புதுப்பிக்க எந்த ஆவணங்களும் தேவையில்லை. இதற்காக, நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Oct 29, 2019, 03:26 PM IST
எந்தவொரு ஆவணமும் இல்லாமல் ஆதார் அட்டையில் நீங்கள் மாற்றங்கள் செய்யலாம்

புதுடில்லி: தற்போது நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டை மிக முக்கியமான ஆதார ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் தேவைப்பட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தங்கள் அல்லது மாற்றங்களைச் செய்துக்கொள்வதற்கு வழிவகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நகரத்தை விட்டு வேறொரு நகரத்திற்க்கோ அல்லது ஒரு இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு மாற்றி சென்றால், நீங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிப்பது மிக முக்கியம். 

ஆதாரில் பல வகையான மாற்றங்களைச் செய்ய முடியும் என்றாலும், இதுபோன்ற தருணத்தில், புதிய இடத்திற்க்கான ஆவணம் அவசியமாகிறது. ஆனால் தற்போது தாங்கள் இடம்பெயர்ந்த புதிய முகவரியை புதுப்பிக்க எந்த ஆவணங்களும் தேவையில்லை. இதற்காக, நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.

ஆதார் மையத்தில் ஆதார் புதுப்பிக்க நீங்கள் செல்லும்போது, உங்களைக் குறித்து மாற்றங்களுக்கு நீங்கள் 50 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தவிர, நீங்கள் பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை செய்ய வேண்டுமானால், மேலும் 50 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஆதார் தேடலுக்கு (இ-கேஒய்சி, கலர் பிரிண்ட் அவுட் போன்றவை), நீங்கள் 30 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். 

புதிய ஆதார் அட்டை பதிவு செய்ய விரும்பினால் முற்றிலும் இலவசம். இது தவிர, அதற்கு தேவையான பயோமெட்ரிக்கும் முறையும் இலவசமாக புதுப்பிக்கப்படும்.