மெசேஞ்சர் சேவையை பயன்படுத்த புதிய விதிமுறை

மெசேஞ்சர் சேவையை இனிமேல் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு பயன்படுத்த முடியாது. 

Last Updated : Dec 29, 2019, 02:46 PM IST
மெசேஞ்சர் சேவையை பயன்படுத்த புதிய விதிமுறை title=

மெசேஞ்சர் சேவையை இனிமேல் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு பயன்படுத்த முடியாது. 

பேஸ்புக் நிறுவனம் தனது மெசேஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசேஞ்சர் சேவையை பயன்படுத்த தங்களது பேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டியதாகும்.

இந்த புதிய விதிமுறையானது பேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் மெசேஞ்சர் லைட் சேவைகளுக்கும் பொருந்தும். இனி மெசேஞ்சர் சேவையை பயன்படுத்துவோர் தங்களது பேஸ்புக் அக்கவுண்ட் கொண்டு சைன்-இன் செய்ய வேண்டி இருக்கும்.

இந்த நடைமுறையானது மெசேஞ்சர் சேவையை பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சைன்-இன் செய்தவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. மேலும் அக்கவுண்ட் இல்லாமல் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்துவோருக்கும் எந்த மாற்றமும் இருக்காது.

  

மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News