கல்லூரி வளாகத்தில் அரசியல் பேச தடை -கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!

கல்லூரி வளாகங்களுக்குள் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்! 

Updated: May 2, 2018, 11:00 AM IST
கல்லூரி வளாகத்தில் அரசியல் பேச தடை -கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!
ZeeNews

கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினர்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகள், பிற இயக்கங்களின் கருத்துகளை பற்றி பேசுவதை அனுமதிக்கக் கூடாது என அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்!

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளது...! 

அரசியல் தொடர்பான கலந்துரையாடலோ, விவாதமோ கல்லூரிகளில் நடத்த நிர்வாகம் அனுமதிக்க கூடாது. ஏனென்றால், அரசியல் விவாதங்கள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் அவற்றை பற்றி பேசுவதற்கு கல்லூரி அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை உயர்கல்வி நிறுவனகலளுக்கு வழங்க கல்லூரி கல்வி இயக்கத்தின் மண்டல இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளனர். 

சமீபத்தல், நடிகர் கமல்ஹாசன் கல்லூரி நிகழ்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார். இதை தொடர்ந்து, ரஜினிகாந்த்தும் பல்கலைகழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். இந்நிலையில் கல்லூரி வளாகத்திற்குள் அரசியல் பேச தடை என கல்வி இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்!