வயதான பெற்றோரை கைவிடுவோருக்கு 6 மாத சிறை: மத்திய அரசு!!

வயதான பெற்றோரை கைவிடுதல் மற்றும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பது குறித்து சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது!

Last Updated : May 13, 2018, 09:59 AM IST
வயதான பெற்றோரை கைவிடுவோருக்கு 6 மாத சிறை: மத்திய அரசு!!  title=

வயதான பெற்றோரை பராமரிக்காமல் பிள்ளைகளே கைவிடுவதால், நாடு முழுவதும் முதியோர் இல்லங்களின் பெருகி வருகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சட்டங்கள் அமலில் உள்ளன. அந்த சட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம், 3 மாத சிறைத்தண்டனையை 6 மாதங்களாக அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரித்தல் மற்றும் நலச்சட்டம் 2007-ஐ மறு ஆய்வு செய்து வரும் இந்த அமைச்சகம், இந்த சட்டத்தின் வரையறையை விரிவுபடுத்தவும் யோசித்து வருகிறது.

அதாவது வயதான பெற்றோரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, இதுவரை அவர்களது உயிரியல் ரீதியான பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில், தற்போது மேலும் சில உறவுகளான, தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள், சட்டப்பூர்வ காப்பாளராக நியமிக்கப்பட்ட சிறுவர்கள் ஆகியோரையும் இந்த சட்ட வரம்புக்குள் உள்ளே கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வயதான பெற்றோருக்கான மாதாந்திர பராமரிப்பு செலவுத்தொகை உச்சவரம்பு ரூ.10 ஆயிரம் என்பதை கைவிட்டுவிட்டு, பிள்ளைகளின் வருமானத்துக்கு ஏற்றவாறு நிர்ணயிப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறிய அவர், முதியவர்களின் உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகளின் அடிப்படையில் மட்டும் பராமரிப்பு செலவை நிர்ணயிக்கக்கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் புதிய வரைவு மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு  அறிவித்துள்ளது.

Trending News