இணையத்தில் பட்டையை கிளப்பும் கோலி சோடா 2-வின் "கெளம்பு"!

இணையத்தில் வாவ்ரலாகும் கோலி சோடா 2-வின் "கெளம்பு" வீடியோ பாடல்!

Last Updated : Apr 26, 2018, 06:45 PM IST
இணையத்தில் பட்டையை கிளப்பும் கோலி சோடா 2-வின் "கெளம்பு"!

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலி சோடா 2’. ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார் விஜய் மில்டன்.

 இப்படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை, விஜய் மில்டனின் ரஃப் நோட் தயாரித்திருக்கிறது.  

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பொண்டாட்டி என்ற சிங்கிள் டிராக் ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் கிளம்பு என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது...! 

 

 

More Stories

Trending News