'தீரன் அதிகாரம் ஒன்று' கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்துவரும் திரைப்படம்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது.
சதுரங்க வேட்டை படத்திற்குப் பிறகு இயக்குனர் வினோத் இயக்கி இருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.
இதில் கார்த்திக் , ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரு மொழிகளிலும் படத்தின் டிரைலர் இன்று 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இன்று உலக உணவு நாள். இதனை ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
உணவு என்றாலே நாம் நினைவிற்கு வருவது விவசாயம், உழைப்பு, பகிர்ந்து சாப்பிடுவது, சந்தேஷம்,
பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக பெண் குழந்தைகள் தினம்.
இந்த காலத்திற்கு ஏற்ப பாலியல் வன்கொடுமைகளும் பெண் என்ற பாலின பாகுபாடுகளும் ஆணாதிக்க வெறிசெயல்களும் அரங்கேரிகொண்டேதான் இருகின்றன.
சமூகத்தில் பெண்கள் அவமதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும், மதிக்கபட வேண்டும் என்பதை உறுதிமொழியாக ஒவ்வொருவரும் ஏற்றால் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் குறையும்.
சென்னையில் கொசு இல்லா இல்லம் என்ற திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் மருத்துவ முகம் இன்று தொடங்கிவைத்து நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
சென்னையில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் நிகழும் மரணங்கள், சென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. அரசு மருத்துவமனைகளில், டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
நம்மில் பலருக்கு காபிகுடிக்கும் பழக்கம் உண்டு அதனை கொண்டாடும் விதமாக சர்வதேச காபி தினம் இன்று.
காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள்.காபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும் இது எத்தனை பேருக்கு தெரியும்.
காபியின் மருத்துவ நன்மைகள்:-
உலக இதய தினம் ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாறியது.
நடிகர் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பலூன்'.
தமிழகத்தில் உள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புடன் விவாதம் எழுந்தபோது, ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என்று நடிகை ஓவியா கூறியது மிகவும் பிரபலமானது.
ஓவியா கூறிய சொற்களை பயன்படுத்தி பாடல் அமைக்கப்போவதாக பலூன் திரைப்படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர்.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி.
இதன் 2-ம் பாகம் துவக்கப்படுவதாக இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை பூஜை போடப்பட்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. லிங்குசாமி, விஷால், ராஜ்கிரண் ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.
சண்டக்கோழி 2-ம் பாகத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமாரும் இப்படத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
காவிரி மகா புஷ்கர விழா இன்று மயிலாடுதுறையில் துவங்கியது. இந்த விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது ஐதீகம். இதன்படி 144 வருடங்களுக்கு பின் மகா புஷ்கர் விழா இன்று துவங்கியது.
ஆவணி மாத பௌர்ணமியை யொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணர்கள் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.
திருமணம் ஆகாதவர் ஒரு ஒரு பூணூல், திருமணம் ஆனவர் இரண்டு பூணூலையும், திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் மூன்று பூணூலையும் அணிந்து கொள்வர்.
அதன்படி இன்று ஆவணி அவிட்டத்தையொட்டி உபநயணம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான, மகாளய பட்சம் இன்று துவங்குகிறது.
'மகாளயம்' என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம்.
நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறது சாஸ்திரம்.
மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம், அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
21-ம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களைக் கைக்குள் அடக்க ஆரம்பித்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. இவரை ரசிகர்கள் செல்லமாக U1 அழைப்பார்கள். பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் யுவனின் பாடல்கள் எப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.
இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். இதைதொடர்ந்து பிரபலங்களும் அவருக்கு டிவிட் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.
மேலும் இன்று யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பலூன் பட குழுவினர் ரொமான்ஸ் பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகராமாக இருக்கும் சென்னைக்கு இன்று 378-வது பிறந்தநாள்.
ஆங்கிலேயர்கள் சொல்லிவைத்தபடி சென்னைக்கு இன்று 378வது ஆகிறது. சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது.
சென்னை தினம் கொண்டாட உருவான கதை:-
கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகள் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் சகோதரர்களுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.