"சண்டக்கோழி 2" இன்று பூஜையுடன் துவங்கியது!

Last Updated : Sep 21, 2017, 02:27 PM IST
"சண்டக்கோழி 2" இன்று பூஜையுடன் துவங்கியது! title=

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. 

இதன் 2-ம் பாகம் துவக்கப்படுவதாக இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை பூஜை போடப்பட்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. லிங்குசாமி, விஷால், ராஜ்கிரண் ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

சண்டக்கோழி 2-ம் பாகத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமாரும் இப்படத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Trending News