இன்று உலக உணவு நாள். இதனை ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
உணவு என்றாலே நாம் நினைவிற்கு வருவது விவசாயம், உழைப்பு, பகிர்ந்து சாப்பிடுவது, சந்தேஷம்,
1945-ம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.
நவம்பர் 1979-ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150-ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
2008-ம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் ''கருப்பொருள் உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்'' என்பதாகும்.
உணவை மற்றவர்களுக்கு அளித்து நாம் மகிழ்ச்சி அடைவோம்.