வடகொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல தடை விதித்து உள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய மக்களை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் பல்வேறு திட்டங்கள் கட்டுப்பாடுகளை விதித்தார். இதை எதிர்த்து அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் டிரம்ப்ப விதித்ததடைக்கு தடை விதிக்க அந்நாட்டு கோர்ட் மறுத்து விட்டது.
கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன.
பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தூதரக உறவை துண்டிப்பதாக தெரிவித்துள்ளன. அத்துடன் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டாதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியா அண்டைய நாடான கத்தாருடன் தூதரக உறவுகளை நிறுத்திக் கொண்டது, தேசத்தை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கத்தாருடனான எல்லையை மூடியது என சவுதி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கத்தார் அதிகாரிகளால் நடத்தப்பட்ட வன்முறை காரணமாக இந்த தீர்க்கமான முடிவு எடுக்கப்படுவதாக சவுதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரெட்சும் கத்தார் உடனான உறவை துண்டிப்பதாக அறிவித்து உள்ளது.
ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா பகுதியை தங்களது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இந்தப் போராளிகள் இந்த கடலோரப் பகுதி வழியாக ஆயுதங்களை கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹோடைடா பகுதியை ஒட்டியுள்ள பாப் அல்-மன்டேப் ஜலசந்தி வழியாக நேற்று வந்த படகின் மீது ஏமன் நாட்டை சேர்ந்த ‘அப்பாச்சி’ ரக விமானப் படை ஹெலிகாப்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
ஏமன் நாட்டின் ஏடன் நகரில், ராணுவ முகாமை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ முகாமை நோக்கி பயங்கரவாதி அதிவேகமாக காரை ஓட்டிவந்து வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தில் 60 பேர் பலியானார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. சம்பவ மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.