கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடை இன்றுடன் நிறைவடைகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று ஐ.பி.எல். தொடரில் தனது ஆதிகத்தை செலுத்தியது.
இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியில் பூனம் ராவ்த் சிறப்பாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும், இன்றையப் போட்டியில் உலக பெண்கள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை மித்தாலி ராஜ் நிகழ்த்தி உள்ளார்.
மகளிர் கிரிக்கெட் அணிக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இந்திய அணி, ஆஸ்திரேலியா அணி மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என சற்று முன் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்றும், இந்திய அணியின் பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங் குலி, நேற்று தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சவுரவ் கங்குலியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:-
“உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் இன்பமான அனுபவமாக இருந்துள்ளது. உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
வீரேந்தர் சேவக் வெளியிட்ட வாழ்த்து செய்தி:-
இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 18-வது லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதாவது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றியை உறுதி செய்யும் உத்வேகத்தில் இருக்கிறது.
மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று நடைப்பெற்ற 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்தது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. 5-வது போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது.
இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முன்னணி அதிரடி ஆட்டகாரரான கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு கார்லோஸ் பிரத்வெய்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றனர்..
எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது.
இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் இடத்தில் உள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த இரு போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
மறுபக்கத்தில், இலங்கை மகளிர் அணி விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவி, வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராகக் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். தற்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிவிட்டதாக டுவிட்டரில் அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியுடன் அனில் கும்ப்ளே செல்லவில்லை.
இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் , ‘பி’ பிரிவை சேர்ந்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவை சேர்ந்த வங்காளதேசும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
நேற்று நடைபெற்று 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதின. இந்த போட்டியில் இந்தியா வங்காளதேசத்தை ஊதித் தள்ளியது.
இதுகுறித்து அதிரடி வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதாவது, ஒரே வீட்டில் நடக்கும் சண்டையில் அரையிறுதி வரை வந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேராண்டி, இனி அப்பாக்கள் தினத்தில் மகனுடன் பைனல் மிச்சமுள்ளது. இதை சீரியஷாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் , ‘பி’ பிரிவை சேர்ந்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவை சேர்ந்த வங்காளதேசும் மோதின.
இந்தியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். இந்தியா தொடர்ந்து ஆடி வருகிறது.
ஓவர் : 20 ஸ்கோர் : 87/1 ரோஹித் 65(70) ; விராத் 13(16)
20 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 46(34) ரன்களில் அவுட் ஆனார்.
ரோஹித் 65(70) மற்றும் விராத் கோலி 13(16) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டியில் முதல் அரையிறுதி சுற்று கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்திய இங்கிலாந்தும், பாகிஸ்தானும் நேற்று மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 211 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி விக்கெட்:-
ஹசன் அலி- 3
ஜுனைத் கான்- 2
ரயீஸ் - 2
விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் நேற்றுடன் நிறைவடைகிறது. கார்டிப்பில் நேற்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதின.
இந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை எடுத்தது.
237 ரன்களை இலக்காகக் கொண்டு களமிங்கியது பாகிஸ்தான் அணி.
சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.
கார்டிப்பில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை எடுத்து சாதனை படைத்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். இதனால் இரு அணி வீரர்களும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 குரூப் - பி பிரிவில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள், நேற்று மோதியது. தென் ஆப்ரிக்க அணியுடனான பி பிரிவு லீக் ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துசியது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் இரு அணிகளும் களமிறங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.