சாம்பியன்ஸ் டிராபி, அரையிறுதி 2: இந்தியா வெற்றி பெற 265 ரன்கள் இலக்கு

Last Updated : Jun 15, 2017, 08:33 PM IST
சாம்பியன்ஸ் டிராபி, அரையிறுதி 2: இந்தியா வெற்றி பெற 265 ரன்கள் இலக்கு title=

இந்தியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். இந்தியா தொடர்ந்து ஆடி வருகிறது.


ஓவர் : 20 ஸ்கோர் : 87/1 ரோஹித் 65(70) ; விராத் 13(16)

20 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 46(34) ரன்களில் அவுட் ஆனார். 

ரோஹித் 65(70) மற்றும் விராத் கோலி 13(16) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். 


ஓவர் : 15 ஸ்கோர் : 87/1 ரோஹித்31(39) ; விராத் 0(2)

15 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 46(34) ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். தற்போது ரோஹித் 41(54) ; விராத் கோலி 0(2) களத்தில் உள்ளனர்.


10 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் 31(39) ; தவான் 32 (20)


வங்கதேச அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. எனவே இந்தியா வெற்றி பெற 265 ரன்கள் தேவை.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், பும்ரா, கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினர்

 

8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதியில், ‘பி’ பிரிவில் இந்தியா, ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்து உள்ளது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

நேற்று நடைபெற்ற முதல் அரைஇறுதியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் சரியாக 37.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவும், வங்காளதேசமும் இதுவரை 32 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 26-ல் இந்தியாவும், 5-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். 

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல்:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, புவனேஷ்வர்குமார்.

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், தஸ்கின் அகமது, மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான். 

இந்நிலையில் பர்மிங்காமில் நடக்கும் இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 

Trending News