திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய் களி' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்.
திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்கிறார் யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர். அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம். மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது.
சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது.
அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி மாத வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாளும் அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.
பொதுவாக அம்மாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் காலம். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரனகிய சூரியனும் இந்து கலாச்சாரத்தில் வணங்ககூடியவர்கள்.
இன்று ஆடி அமாவாசை ஆகும். அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.