இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ராஜபக்சே மூத்த மகன் நாமல் ராஜபக்சே, வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை கற்பழித்ததாக அவர் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. ஆக உள்ளார்.
பத்திரிகைகளில் ஒன்றில் வெளியான செய்தியில், கண்டியில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு நாமல் ராஜபக்சே இளம் பெண்களை அழைத்து சென்று அவர்களுடன் செக்ஸ் உல்லாச ம் அனுபவித்ததாக அந்த செய்தியில் கூறப்படுள்ளது.
கொழும்பில் உள்ள தனக்கு சொந்தமான நிறுவனம் மூலம், ஹேலோகோப் என்னும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் நாமல் ராஜபக்சே பெரும் நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இலங்கை மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் பங்குகளை வாங்கியது தொடர்பாக அவர் காவல்துறையின் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.