சிகரெட், புகையிலை பயன்படுத்துவோருக்கு அதன் பழக்கத்தில் இருந்து விடுபட அவற்றின் அட்டையில் எச்சரிக்கை படம்த்துடன் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:
உலகம் முழுவதும் புகையிலைப் பொருட்களின் விற்பனையால் இளைஞர்களும், அப்பாவி பொதுமக்களும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை குறுகிய காலத்திலேயே இழக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களினால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மே 31-ம் தேதி, உலக புகையிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் புகை பிடித்தலை பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வாருங்கள் புகையிலை பற்றி அறிவோம்.
ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும்.
புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.