கேரளாவில் தென் மேற்கு பருவ மழை வலுவடைந்து உள்ளது. வடக்கு வங்க கடலில் இருந்து மேற்கு வங்க கடல்வரை உள்ள பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த மாதம் இறுதியில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. இதனால் வெயிலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தனர். ஆனால் வெயில் தனது உக்கரத்தை காட்டத் தொடங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.