பாக்கிஸ்தானில் முஹஜிர் சமூகத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பாக்கிஸ்தான் தூதரகம் முன்பு முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் தொண்டர்கள் மற்றம் முஹஜிர் சமுதாயம் மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
ஐ.நா.வின் பொருளாதார தடைகள், உலக நாடுகளின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி வடகொரிய தொடர்ந்து தந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் 6–வது முறையாக தனது அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தியது.
ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் வடகொரியாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வட கொரியா அதன் அணுசக்தித் திறனைப் பயன்படுத்தி தொடர்ந்து நட்பு நாடுகளை அச்சுறுத்தும் முயற்சியை மேற்கொண்டால் அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்தார்.
வட கொரியா அதன் அணுசக்தித் திறனைப் பயன்படுத்தி தொடர்ந்து நட்பு நாடுகளை அச்சுறுத்தும் முயற்சியை மேற்கொண்டால் அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
சமிபகாலமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணையை விண்ணில் ஏவி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. முன்னதாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஜப்பான் மீது ஏவுகணை செலுத்தி சோதனை செய்து உலக நாடுகளை பயமுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகைக்கு நேற்று முதன் முறையாகக் அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப் குடியேறினார். இவருடன் இவர்களது மகன் பேர்ரன் ட்ரம்ப்பும் வெள்ளை மாளிகையிலேயேதான் வசிப்பார்.
அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி நியூயார்க் நகரத்தில் வசித்து வந்தனர்.
தற்போது ஆறு மாதங்களுக்குப் பின்னர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறியதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மெலானியா.
ஒரு கார் டிரைவர் வெள்ளை மாளிகை வரை ஓட்டி வந்த காரில் குண்டு இருக்கிறது என்று தெரிவித்த பின் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அதிகரித்தனர்.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு பேசினார். இதனை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி படுத்தின.
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான நேற்று இரவு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு பேசுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் மோடியுடன் இன்று உரையாட இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:- இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணியளவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் உரையாட இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசியலில் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் மருமகன், அதிபரின் மூத்த ஆலோசகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள இவர், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை கவனிப்பார்.
குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அமெரிக்க அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வரும் ஜனவரி 20-ம் தேதியன்று பதவியேற்க உள்ளார் டொனால்டு டிரம்ப். இதையொட்டி, புதிய அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் நியமனம் தற்போது நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.