அமெரிக்காவிற்கு அடுத்த பரிசும் ரெடி: வடகொரியா!

Last Updated : Sep 5, 2017, 06:54 PM IST
அமெரிக்காவிற்கு அடுத்த பரிசும் ரெடி: வடகொரியா! title=

ஐ.நா.வின் பொருளாதார தடைகள், உலக நாடுகளின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி வடகொரிய தொடர்ந்து தந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் 6–வது முறையாக தனது அணுகுண்டு சோதனையை  வடகொரியா நடத்தியது.

ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் வடகொரியாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வட கொரியா அதன் அணுசக்தித் திறனைப் பயன்படுத்தி தொடர்ந்து நட்பு நாடுகளை அச்சுறுத்தும் முயற்சியை மேற்கொண்டால் அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்தார்.

இந்நிலையில் “அமெரிக்காவுக்கு மேலும் சில பரிசுப்பொருட்களை அனுப்ப வடகொரியா தயாராக உள்ளது" என வடகொரிய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் வடகொரியாவின் இந்த பனிப்போர் எப்போது ஓய்வு பெரும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

Trending News