TRAI: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பாதிக்கும் புதிய கட்டண ஆணை 2.0ஐ TRAI திருத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக (Tamil Nadu Arasu Cable TV chairman) குறிஞ்சி என்.சிவகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொரோனா முழு அடைப்பினை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்வித் துறை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க்குகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொள்கிறது.
இதைக்குறித்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டும் இணைந்து கூறியிருப்பதாவது:-
சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ, தனியார் கேபிள் உரிமையாளர்களுக்கோ எந்த உரிமையும், உரிமமும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டும் கொடுக்கவில்லை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கிறோம்.
3 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிதின்கத்காரி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
அப்பொழுது தமிழக முதல்வரிடம் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது தமிழக நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.