Hyundai Grand i10 Nios Asta CNG: தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் அஸ்டா சிஎன்ஜி வகையை ரூ.8.45 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெட்ரோல் மாடலில் இருக்கும் அதே டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட மாருதி சுசுகி செலெரியோ சிஎன்ஜி காருக்காக மக்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100-ஐத் தாண்டியுள்ளது. காரில் பயணம் செய்வதற்கு அதிகம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா என மக்கள் ஏங்குகிறார்கள்.