நகரத்தில் புதிய வன்முறைகள் பரவுவதாக வதந்திகள் பரவியதை அடுத்து, டெல்லி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்த நிலையில், 32 வயதான ஒருவர் பட்லா பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் இறந்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் வன்முறைக்கு சில நாட்களுக்குப் பின்னர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை (பிப்ரவரி 29,2020) புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், டெல்லியில் இயல்புநிலையை சீக்கிரம் மீட்டெடுப்பதே அவரது முதல் முன்னுரிமை என்றும் கூறினார்.
வடகிழக்கு டில்லியில் 42 பேர் உயிரிழந்த கலவரத்தைத் தொடர்ந்து, உடனடி செய்தி பயன்பாட்டில் வெறுக்கத்தக்க செய்திகள் பரப்பப்படுவதைப் பற்றி மக்கள் புகார் அளிக்கக்கூடிய ஒரு வாட்ஸ்அப் எண்ணை வெளியிடுவது குறித்து டில்லி அரசு பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
கலவரம் ஏற்பட்டபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீட்டை விட்டு வந்தோம். யார் எங்களுக்கு நம்பிக்கை சொன்னார்களோ... அவர்களே எங்கள் வீட்டுக்கு தீ வைத்தனர். நாங்கள் இப்பொழுது எங்கு செல்வோம் என அழுத்தப்படியே கேட்ட முதியவர்.
வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது!!
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின்படியே தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி S.முரளீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!!
வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை சம்பவம் காரணமாக இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். மேலும் 250 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.