டெல்லி வன்முறை குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து... ‘கலவரங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி’

ஹரியானா மின்வாரிய அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா இன்று டெல்லி வன்முறை குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்தை கூறியுள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Feb 27, 2020, 05:45 PM IST
டெல்லி வன்முறை குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து... ‘கலவரங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி’
Photo: PTI

புது டெல்லி: ஹரியானா மின்வாரிய அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா இன்று (வியாழக்கிழமை) டெல்லி வன்முறை குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்தை கூறியுள்ளார். தேசிய ஏற்கனவே தலைநகரில் நடந்த இனக் கலவரங்கள் 35 உயிர்களை பழிவாங்கி உள்ளது. தேசிய தலைநகரில் நடந்த வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சரிடம் கேட்ட போது "கலவரம் நடப்பது இது முதல் முறை அல்ல" என்று கூறினார்.

மேலும் அவர் கூறியது, "கலவரம் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த காலங்களிலும் அவை நடந்து கொண்டிருக்கின்றன. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, டெல்லி முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தன. இது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது" என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். இதுக்குறித்து வீடியோவை செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ளது.

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் சவுதலா, வன்முறை நடந்ததால் உடனடியாக அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தியது. நேற்று அந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் டெல்லியுடன் தொடர்புடையது மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால்.. நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்" என்றார்.

சிர்சா மாவட்டத்தில் ரானியா சட்டசபை தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ரஞ்சித் சவுதலா கடந்த ஆண்டு மனோகர் லால் கட்டார் அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.