கோவையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய நிலையில் இன்று 2வது நாளாக துடைப்பத்துடன் களம் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது தமிழக அனுபவம் குறித்து புத்தகம் ஒன்று எழுதி உள்ளார். "அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள்" எனும் தலைப்பில் இந்த புத்தகம் வெளியாகியுள்ளது!
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவியேற்றார்!
கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ஆம் தேதி தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்தது.
இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தின் கவர்னராக பணியாற்றி வரும் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் பதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வந்தடைந்த புதிய கவர்னராக பதவி ஏற்க உள்ள பன்வாரிலால் புரோகித்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமான தகவல் வந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தின் புதிய கவர்னராக வரும் அக்டோபர் 6-ஆம் தேதி பன்வாரிலால் புரோஹியா பதவியேற்கிறார். புதிய கவர்னருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பாணா்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக பதவி ஏற்கும் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு திமுக சார்பில் முக ஸ்டாலின் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மகாத்மா காந்தியின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் காந்தி சிலைக்கு இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் புகைப்படங்களை முதல்வர் எடப்பாடி பயனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹியா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட இவர் கிண்டி ராஜ்பவனில் வருகிற 6-ம் தேதி பதவியேற்கிறார். புதிய கவர்னருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பாணா்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி காலம் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தமிழகத்திற்கு நிரந்தர கவர்னரை நியமிக்க பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி காலம் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், தமிழகத்திற்கு முழுநேர ஆளுநராக பன்வணிலால் புரோஹித் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேவேளையில், மேகாலயா மாநிலத்திற்கு கவர்னராக கங்கை பிரசாத் நியமிக்கப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்றும் தற்போது இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகார் ராவ் கூறியதாகவும் திருமாவளவன் இன்று கூறியுள்ளார்.
எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சில எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற தாகலும், அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் தங்கியுள்ளதாலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் எடப்பாடி அரசு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி யார் வசம் உள்ளது என்பது பற்றிய குழப்பத்தில் இருந்து மக்களால் இன்னும் மீள முடியவில்லை. காரணம் நாளொன்றுக்கு ஒரு அறிக்கை எனும் விதத்தில் மக்களை குழப்பும் விதத்தில் ஆளும் கட்சியில் இருந்து பல அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் இந்த நிலைமையை விமர்சிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதவது
அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இரண்டு அணிகளாக உள்ளன. இந்த இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அவசரமாக சென்னை வருகிறார். மும்பையில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று சென்னை வருகிறார்.
இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டார். இதனால் இன்று பதவியேற்பு, அமைச்சரவை மாற்றம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை வரும் 14-ம் தேதி கூடுகிறது. அதிமுக அணிகளில் ஏற்பட்டுள்ள பிளவு, நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதம் மிகுந்த காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பொறுப்பு சட்டசபை செயலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியல் சாசனத்தின் 174(1)ம் பிரிவின் கீழ், தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத்தை வரும் 14-ம் தேதியன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கவர்னர் கூட்டியிருக்கிறார் என கூறப்படுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் அங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைப்பெற்று வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி தங்களது அதிகாரங்களை பறிக்க முயல்வதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் உட்பட சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
துணைநிலை ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் மோதல் பிரச்சனையால் அரசு பணிகள் முடங்கின. பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் நிலவும் வரும் பரபரப்பான அரசியல் குழப்பத்துக்கு முடிவுகட்டும் வகையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று யார் தமிழகத்தின் முதல்வர் என்ற முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பதால் அவர் முதல் அமைச்சராக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் நேற்று கடிதம் கொடுத்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இன்று சசிகலா பதவியேற்க உள்ளதாக தகவல் வந்தநிலையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று சென்னை திரும்பும் திட்டமில்லை எனக்கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.